போ, இயேசுவை எழுப்பு GO, AWAKE JESUS 63-11-30E Shreveport, Louisiana, America தேவனே, நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கைகூடும் தேவனே, நான் விசுவாசிக்கிறேன். 2. நாம் ஜெபிப்பதற்காக சற்று நேரம் எழுந்து நிற்போம். நாம் இப்போது தலைகளை தாழ்த்தினவாறு இந்த கூடுகையிலும், கீழ்தளத்திலும், மேற்தளத்திலும் அல்லது எங்கு இருந்தாலும், யாராக இருந்தாலும் தெய்வீக பிரசன்னத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இருக்குமாயின் அதைத் தெரிவிக்க உங்கள் கைகளை அவருக்கு உயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நினைவுகளையும் சிந்தைகளையும் சற்று தக்க வைத்து கொண்டு கிறிஸ்து உங்கள் முன்பு நிற்கிறார் என்பதை விசுவாசியுங்கள். 3. பரலோக பிதாவே, நாங்கள் எங்கள் கைகளை உயர்த்தி நிற்கிறோம், சகோதரர் கூறியது போல், “இது ஒப்புவிக்கும் உலகளாவிய அறிகுறியாகும்.” பூமியிலிருந்து வந்த களிமண்ணின் கட்டிகள் போன்று நாங்கள் உங்களிடம் ஒப்புவிக்கிறோம், தேவனே, இன்றிரவு தேவரீர் உமக்கே மகிமை உம்முடைய ஆவியியையும், ஜீவனையும் அவர்களில் நிரப்புமாறு ஜெபிக்கிறோம். மேலும் உமக்கு மகிமை உண்டாக இன்றிரவு உம்மிடம் ஜெபிக்கிறோம். இன்றிரவு எங்கள் மூலமாக பேசவும், உமது மகத்துவமான கிரியைகளை எங்கள் மூலமாக செய்யவும், எங்கள் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் பதிலளியும் ஆண்டவரே. எங்கள் எல்லோரையும் நீர் அறிவீர். எங்கள் கைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று உமக்குத் தெரியும். எங்கள் நோக்கங்கள், எங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் எங்களுக்கு என்ன தேவை என்றும், அதை பெற்ற பிறகு நாங்கள் அதை வைத்து என்ன செய்வோம் என்றும் அறிந்திருக்கிறீர். மேலும், கர்த்தாவே எங்கள் இதயங்களையும் எண்ணங்களையும் மனதையும் தூய்மையாக்கும். உமது மகத்துவத்தினாலே நாங்கள் கேட்பதை பெற்றுக் கொண்டால் உமக்கே கணம் உண்டாகட்டும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக, அதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 4. இன்று இரவு, மீண்டும் கர்த்தருடைய வீட்டில் இருப்பது நல்லது. என்னை சற்று நிறுத்துமாறு சாத்தான் நியூயார்க்கிலிருந்து வரும் போதே ஜலதோஷத்தை உண்டு பண்ணினான். அவன் ஒவ்வொரு முறையும் எனக்கு கொடுக்கும் போது நான் அவனிடமே கொடுத்து விடுவேன். திரும்பவும் கொடுப்பான். நான் திரும்பவும் அவனிடமே கொடுத்து விடுவேன். பாருங்கள். ஆகவே, நாங்கள் அதை வைத்து ஒரு வித வம்பு பண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் எனக்குத் தெரியும், சிறிது நேரம் கழித்து கர்த்தர் உட்பிரவேசித்து சரி செய்வார். 5. மேலும் உங்கள் எல்லா வேண்டுகோள்களையும் கர்த்தர் அங்கீகரிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு நாம் சுகமளிக்கும் ஆராதனையை பெற்று இருக்கிறோம். இப்போது, அநேகர் பல இடங்களிலிருந்து வந்து, இங்கு ஒரு கூடுதல் இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் முதல் சிந்தனை அவர்களுக்கு வருவது தெய்வீக சுகமளித்தல் என்று யூகித்து ஆச்சரியப்படுகிறேன். பாருங்கள். 6. ஆனால், தெய்வீக சுகமளித்தலை காட்டிலும் சுவிஷேசத்தில் அதிகம் உண்டு. பாருங்கள். இன்றிரவில் எனக்குத் தெரிந்த வியாதிப்பட்ட சரீரங்களில் அதிக வியாதிப்பட்ட சரீரம் ஒன்று உண்டு, அது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் சரீரம் என்று சொல்லுவேன். அந்த சரீரத்திற்கு ஆவிக்குரிய சுகமளித்தல் தேவை. ஒரே ஒரு சுகமளிக்கும் தைலத்தை அறிந்து இருக்கிறேன். அது தான் வார்த்தை. அந்த சுகவீனமான சரீரத்தில் தான் நாம் பெலத்தோடும், மற்றும் ஜீவனுள்ள சுவிஷேச வைட்டமின்களோடு நிற்க முற்படுகிறோம், அதனால் தான் நான் அதிக நேரத்தை வார்த்தையின் மூலமாக சபையை பெலப்படுத்த முயற்சிக்கிறேன். 7. ஒரு புலமை பெற்ற ஊழியருக்கு பதிலாக நான் இருப்பது மிகவும் தகுதியற்ற ஒன்று என்று அறிகிறேன். நான் புலமை பெற்ற ஊழியத்தை அலட்சியம் பண்ணாமல், இதை விசுவாசிக்கிறேன். அது எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்படி சொல்வதினால் நான் என் அறியாமையை ஆதரிக்க முயற்சி செய்யவில்லை. அதை பெற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உண்டு ஆனால் இப்போது தேவையானது என்ன என்றால், வார்த்தையை எப்படி அழகாக பொருத்துவது என்பதை கற்று கொள்வதை பார்க்கிலும் தேவனே தேவை. நமக்கு தேவனே தேவை பாருங்கள். அது சரியானபடி கோர்த்த வார்த்தைகள் மூலமாக வருவதில்லை. அது ஒரு அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்தினுடாகவே வருகிறது. அந்த அர்ப்பணிக்கப்பட்ட இருதயம் கர்த்தருடைய சித்தத்தை செய்கிறது. நீ அந்த சித்தத்தை செய்வதற்கு முன்னால், அந்த சித்தம் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். நீ இங்கு இருக்கும் நோக்கம் என்ன என்று அறிந்து கொள். அது ஒரு........, அல்ல 8. நான் எப்பொழுதுமே சபை ஏனோ தானோ என்று செயல்படக்கூடியது என்று நினைத்தது இல்லை. இயேசு இந்த உலகத்தில் ஏனோ தானோ என்று வரவில்லை, அவர் ஏதோ தற்செயலாக மரிக்கவில்லை. அவர் ஒரு நோக்கத்திற்காக வந்தார். அந்த நோக்கம் தேவனுடைய கற்பனைகளை நிறைவேற்றுவதற்காகவும், அது என்னவெனில் அவர் தனக்கென ஒரு துளிகூட கரைதிரையற்ற (இல்லாத) சபையை பெற்றுக் கொள்வதாகும். 9. ஒரு சபை என்பது முன்குறிக்கப்பட்ட சபையாகும். அந்த புத்தகத்தில் போடப்பட்ட பெயர்களை மீட்கவே இயேசு வந்தார். அந்த கடைசி பெயர் மீட்கப்பட்டவுடன், அந்த புத்தகம் மூடப்பட்டு விடும். இப்போது ஒருவரும் இழந்து போகக்கூடாது என்பது அவரது நோக்கமாய் இருந்தது. ஆனால் அவரது ஞானம் யார் இழந்து போவார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தது. ஆகையால் அவர் முன் குறிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிந்து, அதற்கு பின் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டது. மறை பொருளான தேவனுடைய வல்லமையால் அந்த புத்தகம் செயல்பட்டு, மூடப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்தரிக்கபட்டு, பின்பு ஒரு நாள், மீட்பின் வேலை முடிந்தவுடன், மீட்கப்பட்ட புத்தகத்தை ஆட்டுகுட்டியானவர் அதை எடுக்கிறார். கடைசி பெயர் கூப்பிட்டவுடன், ஆட்டுகுட்டியானவர் வந்து தன்னுடைய சபையை, மீட்டுக் கொள்கிறார். இது மிகவும் சமீபமாக உள்ளது என்று நம்புகிறேன். 10. எனக்கு சில காரியங்கள் செய்வது கடினமாக உள்ளது. அதில் ஒன்று என்னுடைய பதிவுகளை (Records) சரிவர வைப்பது தான். அனேக முறை என்னை பல்வேறு இடங்களில் அழைப்பு விடுத்ததாக பொய்யாக விளம்பரப்படுத்தினார்கள். எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது. சாத்தான் எதையும் என் மீது வீசி ஏறிவான். அவன் செய்திருக்கிறான். அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னிடம் கூறினார், நாம் அங்கு இருப்போம் அல்லவா-? இது உண்மை என்று எனக்கு தெரிய வேண்டும். நான் அதை பற்றி அறிய விரும்புகிறேன் என்றேன். பாருங்கள்-? 11. சமீப காலமாய் நான் நியூயார்க்கில் இருப்பேன் என்று விளம்பரப்படுத்தபட்டது. அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கிறிஸ்தவ வர்த்தகர் ஒருவர் அந்த மனிதரிடம் நான் அக்டோபர் மாதத்தில் இருப்பேன் என்று கூறியுள்ளார். ஏனென்றால் அது அவர்களுக்கு உயிர்மீட்சி கூட்டங்கள் நடத்தப்படும் மாதமாகும். ஆனால் நான் அந்த மனிதனிடம் நவம்பர் முதல் வாரத்தில் தான் உயிர்மீட்சி கூட்டங்களை நடத்த முடியும் என்றேன். ஆனால் அந்த மனிதனோ சரி என்று என்னிடம் கூறிவிட்டு, நியூயார்க்கில் உள்ள மனிதனிடம் நான் அக்டோபரில் வருவேன் என்று கூறியுள்ளான். அந்த நியூயார்க்கில் உள்ள மனிதனோ என்னிடம் ஒன்றும் வினவாமல், கலந்தாராயாமலும், மாநிலம் முழுவதும் அக்டோபரில் வருவேன் என்று விளம்பரப்படுத்தி விட்டார். 12. சில வாரங்களுக்கு முன்பாக டென்னிசியில் உள்ள மெம்பிஸ் என்னும் இடத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. எனது பெயரும், கையொப்பமும் போட்டிருந்தது. அந்த போட்டோ பிரதியாக இருந்ததில் நான் இந்த மனிதனுடன் 30 நாட்கள் உபவாசம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனது வாழ்க்கையில் மூன்று நாட்கள் தான் அதிக பட்சமாக உபவாசம் இருந்திருக்கிறேன். அந்த மனிதனின் பெயரை நான் வாழ்க்கையில் கேள்விப்பட்டதும் இல்லை. மேலும் நான் அங்கு சில குறிப்பிட்ட நாட்கள் இருப்பதாகவும், என்னுடைய எல்லா நண்பர்களையும் மெம்பிசில் உள்ள கூடுகைக்கு வரும்படி கூறியதாகவும், எழுதி இருந்தது. நான் அந்த இடத்தின் பெயரை கேள்விப்பட்டதும் கிடையாது, அந்த மனிதனை அறிந்ததும் கிடையாது. அந்த காரியத்தை பற்றியே அறியவில்லை. ஆனால் பொய்யாய் எனது கையொப்பம் போடப்பட்டிருந்தது. நான் என் பெயரை கையொப்பமிடுவது கிடையாது. யாரையும் நம்புவதும் கிடையாது காரணம் எனது கையொப்பம் போலவே அவர்கள் கையொப்பமிடுவர். நான் கையொப்பம் இட்டதாகவே ஞாபகம் கிடையாது. அது ஒரு தவறான காரியம். எப்படி இதை செய்ய முயற்சித்தார்கள் என்பதை என்னால் காண முடியவில்லை. 13. சில காலத்திற்கு முன்பு நான் வங்கியில் இருந்தேன். என்னுடைய எல்லா கணக்குகளும் வங்கியில் சரிவர இருக்க நான் எப்போதுமே சரிபார்த்து கொண்டே இருப்பேன். ஒரு செல்லுபடியான காசோலை தான் ஒருவனுக்கு நல்ல ரசீது. நாங்கள் திருமணமான நாட்களிலிருந்து அதை தான் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அந்த வங்கி உரிமையாளர் சொன்னார், திரு பிரான்ஹாம் அவர்களே, யாரும் அந்த கையொப்பத்தை போலி கையொப்பம் பண்ண மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார். 14. நான் சொன்னேன். சரி உங்களுக்கு ஒன்று தெரியுமா, எல்லாம் நன்மைக்கென்றே நடக்கிறது என்று சொல்வார்கள். 15. அதனால் அது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. அது மக்களிடம் நான் பொய் சொல்லுவது போல நினைக்க வைக்கிறது. எனக்கோ அங்கு செல்வதை பற்றி ஒன்றுமே தெரியாது. எந்த ஒரு விளம்பரமுமின்றி, ஒன்றுமே இல்லாமல் எனது சுவிஷேசத்தை, எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்று என் தேவன் அழைக்கிறாரோ, அங்கு செல்வேன். எனக்கு யாரிடமும் ஒரு கடமை இல்லை. தேவனிடம் மாத்திரம் மட்டுமே, அவரோடு கூட இருப்பதை தவிர ஒன்றுமில்லை. 16. சபைக்குள் என்னுடைய நோக்கம் என்னவென்றால், தலைகளின் மேல் கரங்களை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் மத்தியில் அந்த எண்ணத்தை தூக்கி எறிய வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள், நான் நானே அதை செய்யும் போது... அவர்கள் சொல்லுகிறார்கள், "சரி சகோதரரே, இன்னார், இன்னார் வந்தார் கரங்களை என் மீது வைத்தார்." இயேசு உங்கள் மீது கரங்களை வைக்கட்டும், பாருங்கள். உங்கள் விசுவாசம் மேலே அவரை தொடும். ஆனால் இப்போது 16 வருடங்களாக நான் முற்றிலும் தோல்வி உற்றேன், பாருங்கள்-! அவர்கள்... காரணம் அநேகர் அதை வேறு விதமாக நம்புகிறார்கள். அதனால்... அதனால் மக்களை திருப்திபடுத்த நாங்கள் கரங்களை வைக்கிறோம். 17. ஆனால் ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், நாம் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து, முழு சபையும் ஒரே நேரத்தில், ஒருமனதோடு ஜெபித்துக் கொண்டு இருக்கும் போது அதை காணும் இதை விட உங்களுக்கு என்ன தேவை. பாருங்கள்-? வார்த்தை அறியப்படும் போது கர்த்தரின் வல்லமை விழும். விசுவாசம் கேட்பதினால் வரும், மேலும் வார்த்தையை கேட்பதினால் வரும், வார்த்தையை பிரசங்கிக்கும் போது அதுவே உண்மை ஆகும். மேலும் கர்த்தர் தமது பிரசன்னத்தை உறுதிபடுத்தும் போது, அதே இடத்தில் அங்கு அது கிரியை செய்யும். 18. இப்போது, இப்போது, நாளை காலை... இப்போது, இந்த இரவு, மன்னிக்கவும், இந்த இரவு, எனக்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. ஏனென்றால் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க போகிறோம். ஆனால் நாளை காலை, எனக்கு ஞாயிறு பள்ளி பாடம் உள்ளது, அது சரியா. அது இந்த அரங்கத்தில் நடைபெறும் எனக்கு ஒரு பாடம் உள்ளது. அது கர்த்தருக்கு சித்தமாயிருந்து, அவர் அனுமதிப்பாரானால் அதை குறித்து பேசுவேன். உங்களுக்கு உங்களுடைய சொந்த ஞாயிறு பள்ளி இருக்கும் என்றால் அங்கு செல்லுங்கள், நீங்கள் இதை கேட்க விரும்பினால், அங்கு பதிவு செய்யும் ஒலிநாடாக்கள் இருக்கும். என் இதயத்தில் ஒரு காரியம் உண்டு, அதை குறித்து பேச விருப்பம் உண்டு, ஒரு வேளை அது சுவிசேஷத்தை பிரசங்கிக்க காரணமும், அதை எவ்வாறு பிரசங்கித்து நம்புகிறேன் என்பதை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும். இந்த காரணத்தினால் தான் கர்த்தர் அதை செய்தார். உலகம் அஸ்திவாரம் போடுவதற்கு முன்பே சுவிஷேசத்தின் இரகசியங்கள் மறைந்திருக்கிறது, ஆனால் இந்த கடைசி காலத்தில் அவை வெளிப்பட உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் அதை பற்றி பேச வாஞ்சிக்கிறேன். 19. நாளை முடிவு ஆராதனை, உங்களால் முடிந்தால் கலந்து கொள்ளவும். 20. பின்பு இங்கிருந்து யூமாவுக்கும், யூமாவிலிருந்து பீனிக்ஸ்க்கும், பிறகு அங்கிருந்து திரும்புகிறோம். இங்கிருந்து விடுபட்ட பின்பு நான் ஒரு சிறு வேட்டை பயணத்துக்கு, என் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் செல்ல விரும்புகிறேன். எனது மனைவி தனது உறவினர்களை பார்க்க செல்லுவாள். பின்பு அங்கிருந்து கலிஃபோர்னியாவுக்கு சென்று மேற்கில் மேலும் கீழுமாக, தென் மாகாணங்களுக்கு லூசியானா, டெக்சாஸ், புளோரிடா ஊடாக செல்வேன். பின்பு அங்கிருந்து கர்த்தருக்கு சித்தமானால் வெளிநாட்டிற்கு நீண்ட பிரயாணமாக செல்வேன். ஆகையால் உங்கள் ஜெபத்தை மிகவும் வாஞ்சிக்கிறேன். 21. இப்போது, தேவனின் சுகமளித்தலின் பிரசன்னத்தையும் மற்றும் எல்லாவற்றையும் உணர்ந்து களிகூர்ந்தால் நலமாய் இருக்கும். ஆனால் அதைவிட மேலானது அதினோடே போகிறது. பின்பு நீங்கள் ஏதாவது பெற்றுக் கொள்ள போகும் போது, அது மக்களைக் கடக்கிறது. இப்போது எல்லோரும் தெய்வீக சுகமளித்தலை நம்புகின்றனர் ஏன்-? தெய்வீக சுகமளித்தலில் சாஸ்டாங்கமாய் விழுந்து விடுகின்றனர்., அப்புறம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று பேரோசையாய் ஒரு மகத்தான நேரத்தை அனுபவிப்பர். ஆனால் அது பற்றி என்ன... அது கொக்கியின் மேல் உள்ள தூண்டில் போன்றது, பாருங்கள் அது அந்த தூண்டில் போன்றது. அந்த கொக்கி அந்த மீனை பிடிக்கிறது. அந்த கொக்கி தான் வார்த்தை. இப்போது இயேசு வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்யும் வரைக்கும் ஒரு பிரசித்த பெற்ற மனிதனாக இருந்தார். 22. இப்போது நாம் இயேசு அல்ல, ஆனால் அது, அவர் நம் எல்லோருக்கு உள்ளும் செயல்படுவதாகும். அவர் ஒரு மனிதனுக்குள் இருப்பவரல்ல, அவர் எல்லா விசுவாசிகளோடும் இருப்பவர். அப்படி தான் நாம் ஜீவனை பற்றி நம்புகிறோம். பின்பு அதில், பாருங்கள் எவ்வளவாய் இந்த ஸ்தலத்தில் என்னை அபிஷேகிக்கிறாரோ அதே வண்ணமாக உங்களையும் அபிஷேகிக்காவிட்டால் ஒன்றும் நடைபெறாது. அது நம் இருவரையும் ஒன்றாக இணைக்கிறது. நாம், நாமிருவருமாக, நாம் இருவரும் அவரை நம்புகிறவர்களாக செய்கிறது. 23. அவர் தமது மகத்துவமான வல்லமையை காண்பிக்கும் பொருட்டு ஒரு காரியத்தை செய்ய முற்பட்டால், யாராவது அதை தவாறாக அணுக முயன்றால், அவர் அதை நிராகரித்து விடுவார். பாருங்கள், அதை கவனித்து பார்த்தால், அவர் பல காரியங்களை சொல்லும் போது, மக்கள் அதை கேட்க மனதில்லாமல் இருக்கின்றனர். நானதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் பேசுபவராக இருப்பாராயின், நாம் கேட்பவர்களாக மட்டும் இருக்க வேண்டும், பின்பு மனஸ்தாபப்பட வேண்டும். இப்போது இதை இதை குறித்து யோசித்து ஜெபம் செய்யவும் 24. இப்போது நினைவுகூருங்கள். நான் அவரது ஊழியத்தை ஒப்பிடும் போது பாருங்கள். முதலாவது கலிலேய தீர்க்கதரிசி, அவரை எல்லோரும் தீர்க்கதரிசி என்று நம்பினர். ஆனால் அவர் வியாதியஸ்தருக்கு சுகம் தரும் தீர்க்கதரிசியாக விளங்கினார். ஆனால் சதுசேயரையும் பரிசேயரையும், அவர்களது பாரம்பரியத்தையும் சேதமடையும்படி விரட்டினதால் அவர் பயித்தியக்காரனானார். அவர் சொன்னார்கள் "அவர் கிறுக்கு பிடித்தவன்" அவரோடு எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். அது கடைசியில் அவரை கல்வாரி சிலுவையில் அறையும் வரைக்கும் சென்றது. 25. இது போலத் தான் எப்பொழுதும் நடந்திருக்கிறது. வேதாகமம் முழுவதும் இது போலத் தான் நடந்திருக்கிறது. இப்படி தான் நடைபெற வேண்டும். காரணம் அவர் தேவன். முடிவுபரியந்தம் அப்படித்தான் வரவேண்டும். ஆனால் செய்தியை சிலுவையில் அறைய முடியாது. செய்தியாளரை அறையலாம், ஆனால் அவரது செய்தியை அறைய முடியாது. அது கர்த்தர் இடதிலிருந்து வருகிறது. காரணம் அது செய்தி. அவர் செய்தியை உடையவராக உள்ளார். 26. இப்போது நாம் சில நிமிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். நேரம் 8 மணி, நான் சபையை 9.30 முடிக்க இருக்கிறேன். சற்று நேரம் ஓய்வெடுத்து ஞாயிறு பள்ளிக்கு செல்லலாம். நாளை ஒரு மகத்துவமான நாள். இரண்டு ஆராதனைகள் உண்டு. நான் சிறு பையனாக இருக்கும் போது ஒரு நாளைக்கு இரண்டு ஆராதனைகள் என்றால் சுவிஷேகர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் முழு மனதோடு நம்பினால் ஒரு புத்தி அறிவார்ந்த பேச்சுக்கு செல்வீரென்றால், ஒவ்வொரு 30 அல்லது 40 நிமிடங்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் அவர்களை கேட்கும்படி செய்யும். அது அவர்களை ஒரு கஷ்டத்துக்கும் உட்படாது. ஆனால் உங்களுடைய முழு இருதயமும், கர்த்தருடைய ஆவியை பிடித்து கொண்டு, மக்கள் முன்பாக நின்றால், அது தான் வித்தியாசம். இப்போது ஜெபிப்போமாக, 27. பரலோக பிதாவே, நாங்கள் பேசிக் கொண்டதிலிருந்து வார்த்தைக்கு செல்லும் போது தம்முடைய ஆசிர்வாதங்களும், தயவும் எங்கள் மீது தங்குவதாக. நாங்கள் உம்முடைய வார்த்தையை நோக்கும் போது, அந்த வார்த்தை மாம்சமாகி எங்கள் மத்தியில் வாசம் செய்யட்டும். மீண்டும் இன்றிரவு சபை ஒரு முறை கூட உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை எல்லோரும் ஒற்றுமையாக பார்க்க, உணர, அறிய, உதவி செய்யும். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவருடைய பிரசன்னம் எங்களுக்கு ஜீவனாய் இருக்கிறது. இப்பொழுதும் இந்த இரவில் அவருடைய மகிமையில் இளைப்பாறி, அந்த ஷெக்கினா மகிமையை கண்டு, ஏற்றுக் கொண்டு, ஷெக்கினா மகிமையில் அவருடைய பிரசன்னத்தில்... அது ஷேகின்னா மகிமை தான் என்பதை கண்டு கொள்ளட்டும். அவர் இப்போது எங்களுக்கு வார்த்தையை திறந்து தர இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 28. இப்போது வேதாகமத்துக்கு திருப்புவோம். பரிசுத்த மாற்கு எழுதின சுவிஷேசம் 4-ஆம் அதிகாரம். இவ்விரவு எனது பிரசங்கத்தின் தலைப்பை இப்படி கூறவுள்ளேன் "போ, இயேசுவை எழுப்பு". மேலும் எனது பாடம் இவ்விரவுக்கு " இயேசுவை காட்சியில் அழைத்தல்" "போ அவரை எழுப்பு" காட்சியில் வரவழை.-!. இதோ இங்கிருக்கிறது வேத பாடம். மாற்கு 4-ஆம் அதிகாரம் 35-ஆம் வசனத்தில் இருந்து. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பி விட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டு போனார்கள். வேறே படவுகளும் அவரோடே கூட இருந்தது. 29. அது ஒரு அற்புதமான தொகுப்பு அல்லவா.-? அவர் இருக்கிற வண்ணமாகவே அவரை பெற்றுக் கொள்ளுங்கள், அவர் எப்படி உங்களுக்கு வழங்கப்பட்டாரோ அப்படியாக பெற்றுக் கொள்ளுங்கள், அவரை கப்பலுக்குள் இருந்து எடுங்கள். அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின் மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாய் இருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலை இல்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்று போய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்-? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற் போயிற்று என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ-? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். 30. வேதாகமம் சொல்லுகிறது "அவர் அதே விதமாக இருக்கிறார், காற்றும் கடலும் அவருக்கு கீழ்படிகிறது. 31. அவர் அந்த நாளில் சற்று சோர்வடைந்து இருப்பார். மேலும் நமது காட்சியில் தேவன் இந்த இரவில் இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டு பிடித்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவ்வாறு தான் இருக்கிறது. 32. அவரை பின் செல்ல நான் விரும்புகிறேன். உங்களுக்கும் அப்படித் தானே (ஜனங்கள் ஆமென் என்று கூறுகின்றனர்). நான் அவரை பின் சென்று அவர் செய்து கொண்டு இருப்பதை பார்க்க ஆசைபடுகிறேன். பின் ஒரு நாள் அவரோடு நாம் இருந்து அவரை பின் சென்று நம் கண்களின் உணர்வால் அவரை பார்த்து இப்போது காண்கிறது போல, என்றென்றும் அவரோட கூட இருப்போம். ஓ-! அவரை பார்க்க, அதுவே எனக்கு போதுமானதாய் இருக்கும். 33. மேலும் இப்பொழுது காட்சிக்குள் வர முயற்சிப்போம். அவர் இங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கண்டு பிடிப்போம். பிரச்சனைகள் வரும் போது அதை எப்படி அதை கவனம் செலுத்தி பாதுகாக்கிறார் என்றும், ஏன் நம்மால் அதை செய்ய முடியவில்லை என்பதை பார்ப்போம். அவரை வெளியில் கடல் மேல் அந்த படகின் பின் புறத்தில் பார்க்கிறோம். மிகவும் கடுமையான நாளாய் அவருக்கு இருந்தது, அதில் சந்தேகமே இல்லை. அவருடைய சரீரம் மிகவும் சோர்வுற்றிருந்தது. பெலவீனதின் நிமித்தமும், சோர்வின் நிமித்தமும் நற்காரியங்களை செய்வதும் அவரை விட்டு சென்று விட்டன. ஏனென்றால் அவர் பிரசங்கிப்பதிலும், அவர் யார் என்பதை காட்ட, பெரிய அடையாளங்களை காண்பிப்பதிலும் மக்களுக்கு சாட்சியாய் இருப்பதிலும், சுகமாக்குவதிலும் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 34. அந்தக் கூட்டமோ சிலர் உற்சாகப்படுத்தவும் சிலர் தூற்றுவதிலும் ஈடுபட்டனர் .ஜனங்கள் இயேசுவை அப்படி செய்வதை கற்பனை செய்து பார்க்க முடியுமா-? அவர்களுக்கும் இயேசுவை விட அதிகமாக தெரியும் போன்று தோன்றியது. சரி நீர் "அதை எப்படி... என்று சொல்கிறீர் 35. இன்றைக்கும் அதே போல தான் செய்கின்றனர், அதே விதமாக. அவர் இன்றைக்கு வந்து அதே காரியங்களை அன்று செய்தது போல செய்வாரானால் மக்கள் அவரை தூற்றுவர், அவரை பித்து பிடித்தவர் (crazy) என்று அழைப்பர். அன்று செய்தது போல, பாருங்கள். அதே போல இருக்கும். அவர்கள் அதை உண்மையான தேவனின் அசைவாடுதலை இந்த உலகம் புரிந்து கொள்ளவே இல்லை. அவரை புரிந்துகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் அது உலகம். 36. "உலகம் இனி என்னை காணாது" என்று கூறினார். ஆனால் நீங்கள் என்னை பார்ப்பீர்கள், ஏனென்றால் உலக முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூடவும், உங்களுக்குள்ளும் இருப்பேன். அவரிடமிருந்து மேற்கூறிய மேற்கோளை ஜனங்கள் பார்ப்பார்கள் என்றால், அதே இடத்தில், நாம் இந்த இரவு எங்கே இருக்கிறோம் என்று கண்டு கொள்ள முடியும். 37. கண் பார்வை இல்லாமல் இருக்கும் ஒரு மனிதனை கற்பனை பண்ணிப் பாருங்கள். அவன் எதையுமே கண்டதில்லை. பின்பு நீங்கள் எதிரே உள்ள பொருட்கள் மீது மோதுவீர்கள். நீங்கள் ஆகாரத்திலிருந்து பெலத்தை பெற வேண்டுமானால் உங்கள் உணவை ஏதாவது இடத்தில் இருந்து வருவித்து பெற வேண்டும். ஆனால் நீங்கள் ஏதாவது ஒன்றில் மோதுவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு உணர்ச்சி இருக்கும், ஆனால் பார்வை இருக்காது. பின்பு திடீரென்று யாரோ ஒருவர் அவர்கள் கண்களை திறக்கும் போது ஒரு முற்றிலுமாக வித்தியாசமான உலகத்தை காண்பார்கள். ஏனென்றால் முன்பு அவர்கள் ஒன்றுமே கண்டதில்லை. 38. நீங்கள் சொல்வீர்கள் "சரி இப்போ எனக்கு நிஜமாகவே சூடாக உள்ளது. அது தான் சூரியன்" "சூரியன் என்றால் என்ன"-? அது ஒரு ஒளி 39. ஒளி என்றால் என்ன-? பாருங்கள். அவன், அந்த பரிமாணத்தில் வாழ்ந்ததே கிடையாது. அவனுக்கு அது என்னவென்பதே தெரியாது. நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பது ஒரு உறுதியான விஷயம் 40. நல்லது, சரி அது என்ன-? பாருங்கள். அவன் அந்த பரிமாணத்தில் வாழ்ந்ததே கிடையாது. அதை அறிந்து கொள்வது அவனுக்கு மிகவும் விசித்திரமாக இருந்திருக்கும். 41. சரி இப்போது கர்த்தர் நம்மை வாழ வைப்பாரானால், நாம் சரீர பிரகாரமாக ஐந்து உணர்ச்சிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு உணர்ச்சி உண்டு, பின்பு நாம் அந்த உணர்ச்சியில் விழிப்போம். அது தான் பார்வையின் உணர்ச்சி, பின்பு அதை பார்க்கிறோம். அது தான் நமக்கு இந்த பொருளை உணரும்படி செய்கிறது. பின்பு யாரோ ஒருவரிடம் சொல்லும்படி செய்கிறது. ஒரு பார்வையற்ற வாழ்க்கை, எதையுமே பார்த்திராத மனிதனிடம் சொல்வது போல அவனுக்கு ஒன்றுமே புரியாது. காரணம் அந்த உணர்ச்சியில் அவன் ஈடுபட்டதே இல்லை. அது போல தான் சுவிசேஷமும் கூட அவர்கள், அவர்கள் அதை புரிந்து கொள்ளவே மாட்டார்கள். அவர்களை அதை பார்க்க செய்வது மிகவும் கடினம். ஏனென்றால் அவர்கள் அதில் வாழ்ந்ததே கிடையாது, அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதை உணர்கின்றனர், அதை அவர்கள், அவர்கள் அதனுடைய பதிலை உடையவர்களாக இருக்கலாம். ஆனால் நிஜமாகவே அது என்னவென்று, அறிய முடியாது என்கிறோம். அந்த திரைக்கு அப்பால் பார்க்க முடியும் என்றால், அது எங்கிருந்து வருகிறது, பின்பு திரும்ப வந்து ஜனங்களிடம் அதை சொல்ல முயற்சிக்கும் போது, அதை வெறும் முயற்சியாக உணர்ந்தது போல, அதை பார்க்கவே முடியாமல் இருந்தால், அதை ஒரு மனிதனிடம் கூறுவது கடினம். ஆனால் அதை செய்ய உன்னால் இயன்றவரை மிக நன்றாக செய்ய வேண்டும். அவரை முகமுகமாக பார்க்கும் வரை. 42. இப்பொழுது நாம் இயேசுவை இங்கு பார்ப்போம். அவர் சோர்ந்து பலவீனமாக இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அடுத்த நாள் கேத்ராவில் அவருக்கு முன்பாக ஒரு பெரிய வேலை உண்டு என்று அறிந்திருந்தார். ஏனென்றால் அங்கே ஒரே ஒரு ஆத்துமா கர்த்தரை கூப்பிட்டுக் கொண்டிருந்தது. ஒரே ஒரு ஆத்துமாவிற்காக அங்கு சோர்ந்து, பலவீனமாக அந்தக் கடலின் புயல் மீது கடந்து கொண்டு செல்கிறதை, உங்களால் கற்பனை பண்ணி பார்க்க முடிகிறதா-? ஆனால், அவர் அதை செய்தார். அது போல தான் அவர் இன்றும் செய்கிறார். 43. கப்பல் குறுக்கே சென்று கொண்டிருந்தது, ஆகையால் அந்த தருணத்தை பிரயோஜனப் படுத்தி கொண்டு சற்று இளைப்பாறும்படி முற்பட்டார். அவருடைய சீஷர்களோ, முன்னமே செய்து கொண்டிருந்த அனுதின அலுவல்களை செய்வதற்காக அவர்களின் துடுப்புகளின் பின்னே சென்று விட்டனர். அந்த நாளுக்குரிய உயிர் மீட்சி முடிந்து விட்டது, இன்றைய நாட்களில் நடப்பதைப் போல என்று நான் நம்புகிறேன். அதே போலத்தான் என்று நம்புகிறேன். 44. இந்த வேளையில் தான் அவர் சற்று இளைப்பாறும்படி ஒரு வேலை கூட்டங்களுக்கு இடையில் முற்பட்டார். சீஷர்களோ அவர்களுடைய பழைய வேலைக்காக சென்று விட்டனர். 45. இப்பொழுது அவர்களைப் பற்றி சற்று யோசித்துப் பார்ப்போம். அவர்கள் அந்த நாளில் நடந்த காரியங்களை பார்த்து, அதைப் பற்றி பேசிக் கொண்டு களிகூர்ந்து கொண்டும் இருந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். பெரிய காரியங்கள் நடைபெற்று வந்தன. மக்கள் குஷ்டரோகத்திலிருந்து சுகமாக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கோ பெரிய கொண்டாட்டமாக இருந்தது. சபைக்குள் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது... அவர்கள் மகிழ்ந்திருந்தனர். ஒரு சபை, ஒரு கட்டடம் அல்ல. மக்கள் தான் அதை உண்டாக்கினர். அன்று பார்த்ததையும், நடந்ததையும் குறித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஒரு வேளை அவருடைய மேசியாத்துவத்தை பற்றியும், தான் எதை உரிமை கோருகிறார் என்பதை பற்றியும் சம்பாஷித்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அவர் வார்த்தையாக இருப்பதையும், அந்த நேரத்தின் செய்தியாக இருப்பதையும் அவர் உரிமை கோரினார். 46. மேலும், அந்த தீர்க்கதரிசி, இதற்கு முன்பு வார்த்தையாய் இருந்த அவரை அறிமுகப்-படுத்தினார். அவன் சொன்னது என்னுடைய நேரம் முடிந்தது எந்த வார்த்தையைக் குறித்து நான் நிறைவேற்ற வந்தேனோ அந்த பகுதியை முடித்து விட்டேன். இப்போது, இதற்கு பிற்பாடு, மீதமுள்ள வார்த்தையை அவர் வெளிப்படுத்த போகிறார். ஆகையால் என் நேரம் முடிவுற்றது. யோவான், இயேசு காட்சியில் வந்த போது, அவன் காட்சியை விட்டு வெளியேறினான். 47. பின்பு அவர் காட்சியில் வந்த போதோ, அவர் அதே வண்ணமாக செய்து மேசியா எப்படி செய்ய வேண்டுமோ அதை போல அவர் செய்தார். மேலும் இது தான் அவர்களின் சம்பாஷனை ஆக இருந்திருக்கும். 48 ஒரு வேளை சிலருக்கும் சாட்சி பகர வேண்டி இருந்திருக்கும். உங்களுக்கு ஒன்று தெரியுமா-? நான் அது எப்படி இருக்கும் என்று நினைக்கவே இல்லை, ஆனால் வேதாகமத்தில் மேசியா என்னவாக இருப்பார் என்பதை பற்றி வாசித்த உடன், அதை அறிந்து கொண்டேன். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். மற்றொன்றையும் புரிந்து கொண்டேன், அவர் அந்த அப்பதைப் பிட்டு ஜனங்களுக்குப் போஷித்த போது, யார் உருவாக்க முடியும், தேவனால் மட்டுமே-! ஆகையால் அவர் மேசியாவாகத் தான் இருக்க முடியும். தேவனைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிக்க முடியாது. தேவன் ஒருவரே சிருஷ்டி கர்த்தா. இங்கே ஐந்து அப்பங்களையும் (பிஸ்கட் என்று பிரன்ஹாம் கூறுகிறார்) இரண்டு மீன்களையும் 5000 பேர்களுக்கு பரிமாறி, மேலும் ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். ஒருவராலும் அதை செய்ய முடியாது, ஆனால் யெகோவாவை தவிர, அதை ஒருவரும் செய்ய முடியாது. அதே கர்த்தர் வானத்திலிருந்து அப்பங்களை மழையாக பொழிந்தார். அந்த ஒருவரே அதைச் செய்ய முடியும். இதோ அவர் இங்கே நமக்குள்ளே ஒரு தாழ்மையான தச்சனாகவும் ஒரு சாதாரண மனிதனாகவும் தென்பட்டார். இதோ பரலோகத்தில் ஒருவரும் காணக் கூடாதவராக இருந்த யெகோவா ஒரு காணக் கூடியவராக நமக்குள் வாசம் செய்தார். அதனால் அவரை நாம் அறிவோம், அவர் யெகோவா தேவன் செய்த அதே வேலையை தான் செய்கிறார். 49. மேலும் அவர்களிடம் அவர் சொன்னது, நான் என்னுடைய பிதாவுடைய வேலைகளை செய்யாவிடில் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். மேசியா, யெகோவாவாக இருக்க வேண்டும், இம்மானுவேல் "தேவன் நம்மோடு". மேலும், நான், இம்மானுவேல் செய்யும் வேலைகளை செய்யாமல், இம்மானுவேல் போல நடவாவிட்டால், என்னுடைய வேலை இம்மானுவேல் போல இருக்காது. ஆனால் நான் இம்மானுவேல் அல்ல என்று என்னை நீங்கள் நம்ப முடியவில்லை என்றால், என்னுடைய கிரியைகளை கவனித்து பாருங்கள். அவை, நான் யார் என்பதை சாட்சி கூறும். பாருங்கள்-!-! 50. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அது அவர்களுடைய சம்பாஷனைகளாக இருந்திருக்கும். அதற்கு பிற்பாடு அந்த சம்பாஷனைகள் வந்ததிருக்கலாம். எப்போ...... அனேகர் சாட்சி பகர்ந்திருப்பர்.. அதோ, அந்திரேயா சாட்சி கூறியிருப்பார். 51. இயேசு பேதுருவிடம் என்ன சொன்னார் என்பதை பற்றி, பேதுரு கூறியிருக்கலாம். எனது பெயரை தேவனைத் தவிர வேறு யாருக்கு தெரிந்திருக்க முடியாது. என்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டார். நான் யார் என்பதை அவர் கூறினார். அந்த மனிதன் என்னை பார்த்ததே கிடையாது. ஆனால் என் தந்தையுடைய பெயரையும் கூப்பிட்டார். ஏன் அது மேசியாவாக தான் இருக்க வேண்டும். நாங்கள் அதை கண்டு கொண்டோம். 52. ஜனங்களுடைய அபிப்ராயத்தை பற்றியே அவர்கள் சம்பாஷித்துக் கொண்டு இருந்திருப்பர் என்பதை இப்பொழுது கண்டு கொண்டோம். அவர்களது அடுத்த சம்பாஷனை அதுவாகத்தான் இருந்திருக்கும். இயேசு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். இப்போது சற்று காட்சிக்குள் சென்று ஜனங்களுடைய அபிப்ராயத்தை பற்றி கவனிப்போம். சிலர் கூறினர்..... 53. சரி சிலர் அதை நம்பினர், சிலர் கூறினர், "ஒரு மனிதன் இதற்கு முன்பு இப்படி பேசினதே கிடையாது" அந்த மனுஷன் என்ன கூறுகிறார்," தேவன், அவர் சொல்வதெல்லாம் ஆமோதிக்கிறார்" என்று ஒரு வேளை தேவன் இந்த மனிதனை மெய்ப்பித்துக் காட்டி, அவர் சொல்வதெல்லாம் நிறைவேறி விட்டால், அப்பொழுது இந்த மனிதனிடம் தேவன் இருக்கிறார் என்பதை வேதாகமத்தின் மூலமாக நாம் நன்கு அறிவோம். மேலும் அந்த மனிதனுக்கு பயப்படும் படியாக தேவன் கூறி இருக்கிறார். "அவருடைய வார்த்தை தேவனுடைய வார்த்தை, ஆகையால் அவருக்கு பயப்படுங்கள்" என்று அவர்கள் சொன்னார்கள். இப்போ, காற்றும் கடலும் அவருக்கு கீழ்படிகிறதை பார்த்த காரணத்தினால், அவர்கள் மிகவும் பயந்தார்கள். அவர் தேவன் என்பதை அறிந்து நடுங்கினார்கள். அவர் தேவனாகத் தான் இருக்க வேண்டும். கர்த்தர் அவருடைய வார்த்தையை மேன்மை படுத்தியிருக்கிறார். அவர் என்ன சொன்னாரோ அது நடந்தது. ஆகையால் அவர் மேசியா என்று அறிந்து கொண்டனர். 54. இப்போது அவருடைய மனப்பான்மையை பற்றி சம்பாஷித்துக் கொண்டு இருக்கும் போதே, அவர்கள் சொன்னார்கள் "சிலர் நம்பினர், சிலர் நம்ப மாட்டோம் என்றனர்," 55. இப்போது "இந்த மனப்பான்மை சபைகளுக்குள்ளும் நிலவுகிறது." எல்லா சபை கூட்டங்களிலும் மூன்று வகுப்பு கொண்ட மக்களைப் பார்க்கிறோம். சமீப காலமாக நான் இதைப்பற்றி நியூயார்க் பட்டணத்திலே அல்லது வேறு எங்கோ நேர்மையான முறையில் பிரசங்கித்திருக்கிறேன். அது அது விசுவாசிகள், அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள். ஒன்றோ இரண்டோ அதிகாரங்களுக்கு பிற்பாடு அதை கண்டு கொள்வோம் அவருடைய சொந்த குழுவினரும் அப்படி தான் அதை நிரூபித்தனர். இப்போது, சில நொடிக்கு பிற்பாடு விசுவாசிகளை பற்றியும் அவிசுவாசிகளை பற்றியும் யோசிப்போம். 56. விசுவாசிகள் என்பவர்கள் வார்த்தைக்கு முன்குறிக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டவர்கள். அதை எப்போது பார்க்கின்றனரோ அதில் திருப்தி அடைகின்றனர். ஜீவன் அவர்களுக்குள் முளைத்தெழும்பி அதை ஏற்றுக் கொள்ள செய்கிறது அவர்கள் தான் சீஷர்கள் அதை பற்றி எந்த ஒரு கேள்வியும் அவர்கள் உள்ளத்தில் எழும்பவில்லை. அதை அப்படியே பின்பற்றினர். சீஷர்கள் தான் விசுவாசிகள். அவர்கள் அதை விசுவாசித்தனர். 57. இப்போது அனேக நேரங்களில் ஒரு அவிசுவாசி, உண்மையான விசுவாசியை போல பாவனை செய்வான். அவிசுவாசிகள் அந்த எழுபது சீஷர்களை போல, அவருடைய பெயர் பிரஸ்தாபத்திற்காகவும், பளபளக்கும் சுவிஷேசத்திற்காகவும் அவரை பின்பற்றினர். அவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பும் போதும், குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கும் போதும், நிகழ்ந்து கொண்டிருக்கின்ற காரியங்களை முன்கூட்டியே சொல்லும் போதும், அவர்கள், அவரோடு பிரசன்னமாய் இருப்பதை மிகவும் விரும்பினார். ஒரு நாள் அவர்களது கிரியை பற்றி அவர் ஏதோ கூறினார். அவர் ஏதோ ஒன்றைக் கூற, அது அவர்கள் நம்பிக்கொண்டிருந்த காரியத்தை குறுக்கிட செய்த மாத்திரத்தில், அந்த எழுபது சீஷரும் "அவர் சொல்வது மிகவும் கடினமாக உள்ளது." மேலும் அவன் "மனுஷகுமாரன் பரலோகத்திற்கு ஏறுவதை பார்த்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள், அவர் அங்கிருந்து தானே வந்தார்" என்று அவன் கூறுகிறான். இப்போது இந்த மனிதனோட நாம் உறங்கி இருக்கிறோம், உணவு உண்டு இருக்கிறோம், நாம் கைகளை கழுவின பாத்திரத்தில் அந்த மனிதனும் கழுவினதை பார்த்து இருக்கிறோம், நாம் சாப்பிடுவதை போல இந்த மனிதனும் சாப்பிடுவான், நாம் உறங்குவது போல இவனும் உறங்குவான். நமக்கு ஏற்றத்தாழ்வுகள் இருப்பது போல, இவருக்கும் உண்டு, இவரோ தான் பரலோகத்திலிருந்து வந்தார் என்கிறாரே. பாருங்கள் இது என்னால் நம்பவே முடியவில்லை, இது அதிகமாக தெரிகிறது. அவர்கள் என்ன செய்தார்கள், அவர்களால் அந்த கூடுகையில் உட்கார முடியவில்லை. அவர்கள் எழுந்து வெளியேறினர். பாருங்கள் அது அவிசுவாசிகள்-! பாருங்கள், அவர்களால் அதற்கு நிற்க முடியவில்லை. இல்லை ஐயா அவர்கள் அவரை விட்டு விட்டனர், மேற்கொண்டு அவரோட நடக்கவே இல்லை. 58. இப்போது விசுவாசிகளுக்கோ அதிலிருந்த ஒன்றுமே பிரிக்க முடியாது. 59. இதோ, அந்த அவிசுவாசிகள், அவர் ஏதாவது ஒரு காரியத்தை சொன்ன மாத்திரத்தில், அவர்கள் நம்பும் காரியத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது. ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். வேதாகமம் என்ன போதிக்கிறது என்று, ஒரு அவிசுவாசி உண்மையான விசுவாசி போல இருப்பான். அது முன்குறிக்கப்பட்டவர்களையும் வஞ்சித்து விடும், பாருங்கள் அது அவிசுவாசம். அவர்கள் விரும்பாததை அவர் சொன்ன மாத்திரத்தில் அவர்கள் விரும்புவது இல்லை. பாருங்கள், அது அவிசுவாசம் .அது அப்படியே காட்டுகிறது. 60. அந்த வித்தை, கொண்டு வருவதற்கு, ஜீவனின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போது, கற்பாறை மேல் அவ்வெளிச்சம் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்யாது. மரித்த வஸ்துக்கள் மீது அது என்ன செய்யும்-? அது மரித்த வஸ்துக்கலுக்காக அனுப்பப்படவில்லை சூரிய வெளிச்சம். ஒரு ஜீவனுக்காக, முளைத்த விதைக்கு தான் பிரகாசிக்கிறது. பின்பு இந்த வேதாகமும், அதன் வார்த்தைகளும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மணி நேரத்திதற்கு, முன் குறிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனை பெறும்படியாக அவர்கள் பார்க்கும்படி அவர்கள் மீது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்க்கு ஒரு துளிக்கூட ஒன்றும் செய்யயாது. அங்கு ஜீவன் இல்லாததால் சூரியனாலோ, அல்லது அதின் வெளிச்சத்தினாலோ ஒன்றும் செய்ய இயலாது. 61. பின்பு அவர்கள், தங்கள் முதுகை காட்டி, அவருடன் ஒரு போதும் அதற்குப் பிறகு பின் செல்லாமல் கடந்து சென்று விட்டனர், என்பதை கண்டு கொள்கிறோம். இது எப்போதென்றால் அந்த மகா நேர்மையானவர் அதைப்பற்றி சொன்ன போது... சீமோன் பேதுரு சொன்னான். இயேசு அந்த எழுபது பேர் சென்ற பிறகு, சொன்னார் "சரி என்ன... அவர்களுக்கு பலமான கோட்பாடுகளை கொடுத்தார். அவர் அவரது சுகமளிக்கும் நாட்கள் இப்போது தான் முடிந்தது. அவர் அதை பற்றி கவனம் செலுத்தவில்லை, அதிகமாக சுகமளிக்கப் போவதும் இல்லை. அவர்களுக்கு நலமானதை சொல்ல போகிறார். அவர் அவர்களிடம் தான் யார் என்பதை வெளிப்படுத்தி "நீங்கள் மனுஷகுமாரன் பரலோகத்திற்கு இறங்கு... ஏறுவதையும் கண்டால், என்ன சொல்வீர்கள்". 62. இப்போது உன்னுடைய பிறப்பு பற்றின ஆவணங்கள் எங்களிடம் உண்டு. கீழே நாசரேத்தில் மேரிக்கும் யோசேப்புக்கும் பிறந்த நீ பரலோகத்திலிருந்து வந்தேன் என்கிறீர். நல்லது அது ...நீ ...உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நம்புகிறேன். "பாருங்கள்" நாங்கள் இப்படிப் பட்ட மனிதனை பின்பற்ற விரும்ப மாட்டோம். ஆதலால் அப்படியே சென்று விட்டனர் அது அவிசுவாசிகள். 63. ஆனால் இப்போது கவனித்துப் பாருங்கள், அங்கு விசுவாசிகள் இருக்கின்றனர். என்ன நடந்தாலும் சரி, அது காரியமல்ல. என்ன நிகழ்ந்தாலும், அது எவ்வளவு கடினமாகவும், மர்மமாகவும் இருந்தாலும் சரி அவர்கள் நம்புகின்றனர். அது ஜெபிக்கின்ற மனிதனையோ அல்லது மனுஷியை போல உள்ளது. அவர்கள் நம்புவர். ஒரு காரியமும் அவர்கள் மனதை மாற்றுவது இல்லை. அவர்கள் உண்மையான விசுவாசிகள். மேலும் ஒன்றுமே... அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இது ஏன்... இது நடக்காது... இதெல்லாம் அதோட ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் எப்படியாகிலும் நம்புவர். 64. இப்போது அவர் அநேக காரியங்களை பற்றி சொன்ன போது, சீஷர்கள் அதை நம்பவோ பார்க்கவோ முடியவில்லை என்றாலும், அதை எப்படியாயினும் அவர்கள் நம்பினர். அதோடு கூட அவர்கள் சென்றார்கள். ஏனென்றால் வேதாகமம் இயேசுவே, மேசியா என்பதை முற்றிலுமாக அடையாளப்படுத்தி காட்டினதின் நிமித்தம், அவர்கள் திடமாக நம்பினார்கள். 65. இந்தக் கடைசி பரிசுத்த ஆவியின் நாட்களில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை, தேவனின் மகா பெரிய அசைவின் மூலமாக இந்நாட்களில், வேதாகமம் முற்றிலுமாக அடையாளப்படுத்திக் காட்டுவதை நம்புகிறேன். யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலையே கிடையாது. அது முற்றிலும் உண்மை என்பதை, வேதாகமம் அடையாளப்படுத்தி காட்டுவதினால் அது உண்மை என்பதை நாம் நம்புகிறோம். 66. நீங்கள் சொல்லுவீர்கள், சகோதர பிரன்ஹாமே நீங்கள் அதை நன்கு புரிந்து இருக்கிறீர்கள் என்று நான் புரிந்திருக்கவில்லை அதை நம்புகிறேன். எனக்கு இவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை, அதற்கு முற்படவுமில்லை. நீங்கள் தேவனை புரிந்து கொள்ள முடியாது. விசுவாசத்தின் மூலமாக அவரை ஏற்றுக் கொள்ள முடியும். மேலும்… விசுவாசம் என்பது ஒன்றை நம்புவதாகும். அதற்காக உங்களால் விளக்கம் கூற இயலாது. அங்கு தான் நீங்கள் இருக்கிறீர்கள். அங்கு உண்மை இருக்கிறது. 67. இப்போது மற்றுமொரு கூட்டம் எப்பொழுதுமே அவரை சுற்றி இருக்கும். அது தான் பாவனை விசுவாசிகள். இந்த பாவனை விசுவாசிகள் தான் மாய்மாலம் செய்யும் பாசாங்கு செய்பவர்கள் எனப்படுவர். 68. இப்போது, ஒரு பாவனை விசுவாசியை எடுப்போம். அது யூதாஸ் ஆகும். அவன் தான் பாவனை விசுவாசி. பாவனை விசுவாசி கூடவே தொங்கிக் கொண்டு ஏதாவது வழியில் ஏதாவது ஒரு குற்றம் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்பான். அவர்கள் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே, வெகு நேரம் சுற்றி இருந்து, ஒரு சிறு தப்பு கண்டு பிடித்தால், அதை வெளியில் சென்று மற்றவரிடம் அம்பலப்படுத்தி விடுவர். எந்த வகையான தந்திரம் என்று நாங்கள் பார்க்க வேண்டும். எந்த முயல் கால் உங்கள் காதுகளுக்கு பின்னால் தேய்த்தது. அந்த தந்திரம் என்ன-? அதை அவர்கள் ஆள் மாறாட்டம் பண்ணுவார்கள். அது தான் பாவன விசுவாசி. அது யூதாஸ் வகுப்பினர்கள். 69. அவர்கள் தான் அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள். இந்த மூன்றும், இன்றும் உலகமெங்கும் இருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதுமே அப்படி தான். இப்போது இந்த இரவு, இந்த ஒலி நாடாவை கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் யோசித்துப் பாருங்கள். எப்பொழுதுமே இந்த மூன்று விதமான வகுப்புகளை கொண்ட மக்கள் தான் கூடுவர். 70. ஒரு கூட்டத்திற்கு அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. எது வருகிறதோ, எது செல்கிறதோ, அவர்கள் முற்றிலுமாக அதை நம்பப்பட்டு இருப்பார்கள். 71. மற்றவர்கள் அதிகம் விசுவாசித்து மீதமுள்ளதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் அவிசுவாசிகள். 72. பின்பு அந்த பாவனை விசுவாசிகளோ, தொங்கி கொண்டு, ஒரு குற்றம் கண்டு பிடிக்கும் வரை, சுற்றி சுற்றி வருவர். பின்பு அவர்கள் அது தான் அது, "அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறன்" அங்கு தான் நீங்கள். 73. ஆனால் ஒரு நிஜமான விசுவாசியோ அங்கும் இங்குமாக அசைய மாட்டான், ஒன்றும் அவனை அசைக்க முடியாது. 74. அங்கு நின்று கொண்டிருக்கும் இயேசுவை பற்றி என்ன-? முகம் முழுவதும் உமிழ்ந்த நீர், முகம் முழுவதும் ரத்தம், தலை மேல் முட்களால் செய்யப்பட்ட கிரீடம். மற்றும் எல்லாம் கேலி பரிகாசம் செய்த கூட்டம், இன்னும் அனேகம். இது போல, நல்லது அந்த அவிசிவாசி அல்லது அந்த பாவனை விசுவாசி அதைக் குறித்து என்ன யோசித்திருப்பான். "அவனை விற்று விடுங்கள்" மேலும் நீங்கள் கண்டு கொள்வீர்கள் என்றால் அந்தப் பாவனை விசுவாசி தான் உங்களை விற்று போடுவான். அவன் தான் உங்கள் சுவிசேஷத்தை விற்று போடுவான். அந்த பாவனை விசுவாசி. 75. ஆனால் உண்மையான விசுவாசி, எதுவாக இருந்தாலும், அவர்கள் முற்றிலும் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் முற்றிலும் விசுவாசிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் இருக்கின்ற ஜீவன் ஏற்கனவே கிறிஸ்துவாக ஆகிவிட்டது அது கிறிஸ்து. இனி நீ அல்ல கிறிஸ்து தான் உன்னில் ஜீவிக்கிறார். மேலும், ஒரு காரியமும் அல்ல. அங்கு ஒன்றுமில்லை. பவுல் சொல்கிறார் நிகழ்காரியமா, வரும் காரியமோ, மரணமோ, கஷ்டமோ, நிர்வாணமோ, எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவில் உள்ள தேவனின் அன்பை விட்டு பிரிக்க முடியாது. இல்லை, இல்லை, எத்தனை பேர், இது, அது, மற்றது என்று கூறினாலும். எத்தனை இறையியலில் டாக்டர் பட்டம் பெற்று விளக்கம் கூற முற்பட்டாலும், இது மற்றொரு நாளுக்கு என்று சொன்னாலும், அது நம்மை பிரிக்காது. நீங்கள் அங்கு தான் இருப்பீர்கள். அது கிறிஸ்துவுக்குள் நீங்கள். நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல, அது நீங்களும் கர்த்தரும் மட்டுமே. 76. ஒரு அவிசுவாசிக்கு தப்பிக்கும் வழி எவ்வளவு சீக்கிரமாய் கிடைக்குமோ, எப்படியோ அவன் விலகிப் போக முயற்சி செய்து கொண்டிருக்கிறான், ஆகையால் அவன் போய் விடுகிறான். 77. பாவனை விசுவாசியோ சிறிது அதிகமான நேரம் கூடவே தரித்திருந்து, ஏதாவது கிடைக்கும் வரை பார்த்து, அதன் பின் அதன் மேல் குற்றம் சாட்டி விமர்சிப்பான். 78. எனவே உங்கள் மூன்றும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகை தான் அப்போது அவர்களிடம் இருந்தது. அந்த வகை தான் இப்போதும் அவர்களிடம் இருக்கிறது, அந்த வகை தான் இயேசு வரும் வரைக்கும் அல்லது கர்த்தர் அந்த மகா பெரிய வெள்ளை சிங்காசனத்தில் நியாயம் தீர்ப்பிற்கு பின் அவர்களை பிரிக்கும் வரை இருக்கும். 79. சிலர் சொன்னார்கள் "ஒரு மனிதன் இவரை போல பேசினதே கிடையாது." அவர் என்ன சொல்கிறாரோ அது அப்படியே நடக்கிறது. 80. மற்ற அவிசுவாசிகள் அவன் பெயல்சபூல். அவன் தன்னுடைய சிந்தையை இழந்து இருக்கிறான். அவன் தன்னை சார்ந்தே இருப்பான் என்றனர். 81. உங்களுக்குத் தெரியுமா, சாத்தான் ஒரு பெரிய காரியத்தைச் செய்ய முயற்சிப்பான், அவன் "செய்தியாளன் தன் சிந்தையை இழந்து விட்டான்" என்று பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்களையே சொல்ல வைப்பான். 82. நான் ஒரு சிறிய சுற்றறிக்கையை பெற்றுக் கொண்டேன், அந்த நாளில் அந்த கடிதத்தில் ஏழ்மையான சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் அவரை எலியா என்று நினைத்தோம் என்ற சொல்லி "உங்களுக்கு தெரியுமா, அவர்.. அவர், தன்னுடைய சிந்தையை இழந்து விட்டார், மேலும் அந்த கடிதத்தில் எலியாவின் வஸ்திரம் எலிசா மீது விழுந்தது. அந்த எலிசா என்னுடைய மனைவியாம், பின் அவள் ஊழியத்தை நடத்துவதற்கு இரட்டத்தனையான பங்கோடு செயல்படுகிறாள். "ஒரு ஸ்திரி" அந்த எலிசா தன் மனதை இழந்தானா-? அல்லது மரணத்தை காணாமல் ரதத்தோடு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டானா-? பாருங்கள். ஆனால், அது நம்மிடம் உண்டு, பாருங்கள். அது அப்படித் தான் நாம், நம்மை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும். 83. ஒரு சிலர், "இவன் பெயல்சபூல்" என்று அந்த அவிசுவாசிகள் சொன்னார்கள். 84. ஒரு வேளை யோவான் சொல்லி இருப்பான் இது ஒன்றை மாத்திரம் யோசித்துப் பாருங்கள், இவை எல்லாவற்றையும் யார் செய்கிறார், மீண்டும் இது விசுவாசிகள் பக்கமாக திரும்பி, அது என்ன சொன்னது என்று பார்ப்போம். சற்று அந்த ஒருவரை பற்றி யோசித்துப் பாருங்கள் எல்லாவற்றையும் செய்த அவரையே அல்லாமல், நாம் யாரை யோசித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், மற்ற ஜனங்களின் அபிப்பிராயத்தையும் அறிந்துக் கொண்டு இருக்கிறோம். நாம் எல்லோரும் விசுவாசிகள் என்று அவன் சொன்னான். நாம் அதை விசுவாசிக்கிறோம், ஆம் ஐயா, அவர் உண்மையாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை அறிந்து திருப்தி அடைகிறோம், அதோ-! அங்கே படுத்திருக்கிறார்-!. "ஒரு ஒரு சாதாரண சாவுக்குரிய மனிதனாக, அந்தக் சிறிய கப்பலின் ஒதுக்கிடத்தில், ஒரு தலையணை மீது தூங்கிக் கொண்டே இருக்கிறார். நாம் அவரை மீண்டும் தூங்க வைப்போம். ஆனால் யோசித்துப் பாருங்கள், அண்ட சராசரத்தையும் சிருஷ்டித்த தேவன் நம்மோடு கூட, இந்தத் தண்ணீர் மீது சென்று கொண்டிருக்கிறார், ஓ என்ன, ஆமென். 85. அங்கு தண்ணீர் நம்பத்தகாத விதத்தில் அலைகளின் தாக்கம் இருந்தது. "எருசலேமை சுற்றி இருந்திருப்பீர்கள் என்றால், ஒரு புயல் எவ்வாறு அங்கே இருக்கும் என்று அறிவீர்கள், நான் யுகிக்கிறேன், ஜாக்-! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அந்தப் புயல் எப்படி எல்லாம் விசில்கள் ஊடாக அடித்துக் கொண்டு, மீனவர்களையும் கடலுக்குள் மூழ்கடிக்க செய்யும். இது போலத் தான் அன்றைக்கும் இருந்தது, நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள், ஆனால் திடீரென்று அந்தப் புயல் அங்கு வந்து விடும். 86. மேலும்-! இப்போது சற்று யோசியுங்கள், நாம் எல்லோரும், நம் வாழ்க்கை முழுவதும் இந்த அபாயகரமான தண்ணீரை கடக்க மிகவும் பயந்ததுண்டு. ஆனால் நினைவு கொள்ளுங்கள் நமக்கு தெரியும், அந்த ஒரே ஒருவரான சர்வ சிருஷ்டிகர், அங்கு நம்முடன் அந்த படகில் படுத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு மிகவும் நன்றாக உள்ளது-! உங்களுக்கும் அப்படித் தானே-? அவர்கள் ஆமென், ஆம் ஐயா-! அந்தப் படகில் தான் இருக்கிறார் என்று சொல்லுவார்கள். 87. மேலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்களை பற்றி என்ன-? அவர்கள் அடையாளத்தை கண்டறிந்தனர். யார் என்ன சொல்லி இருந்தாலும் அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை, அவர்கள் திருப்தியாக இருந்தனர். அவர்களது சம்பாஷனைகள், விசுவாசிகளை பற்றியும், அவிசுவாசிகளை பற்றியும், மற்றும் அந்த விதமாக இருந்தன. ஆனால் அவர்களோ அதை விசுவாசித்தனர். அவர்களுக்கு அவர் கூடவே இருந்தார் என்பதை அறிந்திருந்ததால், மற்றவரைப் பற்றி கவலையே இல்லை. அவரை வைத்துக் கொள்வதை மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டு இருந்தனர். 88. நானும் கூட-! நீங்களும் அவ்வாறு தானே-! (சபையார் "ஆமென்" என்கின்றனர்). இந்த உலகத்தில் மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, அவர் என்னுடன் வாழ்க்கையின் கொந்தளித்து கொண்டிருக்கிற கடலில் படகில் பயணம் செய்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆமென்-! ஆமென்-! வேதனை நிறைந்த கொடூர வாழ்க்கை என்ற கடலில், எந்த நேரத்தில் சுட்டுக் கொல்லப்படுவோமோ, என்றோ-? மற்றும் என்ன நடந்தாலும் சரி, நம்மோடு கூட எப்பொழுதுமே பயணிக்கிறார், அந்த சிருஷ்டிகர். 89. உன்னை பற்றி என்ன-? எப்படி இருந்தாலும், நீ, லூசியானா, களிமண்ணில், உயிருடன் இருக்கும் ஒரு சிறிய கட்டி. அவ்வளவு தான்-! நீ டெக்சாஸ்சில் இருந்தாலும் சரி, அந்த பெரிய இடத்தில், நீ ஒரு கொஞ்ச தண்ணீரோடு கூடிய டெக்சாஸ் மண் கட்டி தான். அவ்வளவு தான்-!. சரியாக, நீ அது தான். பின்பு அதற்கே திரும்புவாய். 90. ஆனால் ஜீவன் இல்லாமல், எப்படி அந்த மண் நடந்து, சுவாசித்து, புசித்து கொண்டிருக்கும். யோசித்துப் பாருங்கள், அது சிருஷ்டிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. அதை சிருஷ்டித்த அந்த சிருஷ்டி தான் அந்த மண் கப்பலில் பயணித்து கொண்டிருக்கிறார். ஆமென்-! நான் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அவ்வண்ணமாகவே என்னை உண்டாக்கினார். எனது விருப்பம் இல்லாமல், நான் இப்போது இருக்கும் வண்ணமாக சிருஷ்டித்தவர், எனது விருப்பத்தோடு, அவரின் வார்த்தையால் உண்டான வாக்குத்தத்ததின் மூலம் எவ்வளவாக என்னை உயர்த்த முடியும். நாம் வாழ்க்கை என்ற துயர கடலில் சென்று கொண்டிருக்கும் போது, நாம் அவரைப் போல இருக்க வேண்டும், அவரது ஆவி, நம் மூலமாக கிரியை செய்ய வேண்டும். வாழ்கை துயர கடலில் செல்கையில், நாம் அவரை போல இருக்கவேண்டும் அவரது ஆவி நம்மூலமாக செயல்பட வேண்டும் கப்பல் சிதைவில் கைவிடப்பட்ட ஒரு சகோதரன் அதை பார்த்து மீண்டும் தைரியம் கொள்ள வேண்டும் 91. யோசித்துப் பாருங்கள், அவர் நம்மோடு இருக்கிறார். என்ன ஒரு பாதுகாப்பு-! இந்த கொந்தளித்து கொண்டிருக்கிற கப்பலில் பிரயாணித்துக் கொண்டிருக்கும் போது, இந்த உயிர்மீட்சியின் வெற்றியைக் கண்டு விருந்து உண்பவர்கள் போல உள்ளது. 92. நான் ஷீவெர்போட் லூசியானாவிற்கு முதல் முறை பிரயாணித்த போது, ஒரு காரியம் நினைவுக்கு வருகிறது. ஜாக் மூர் பற்றி கேள்விபட்டதே கிடையாது. நான் நினைக்கிறேன், அது சகோதரன் ரிச்சர்ட் ரீட் (சகோதரன் ரீடை அநேக வருடங்களாய் பார்க்கவில்லை) தான் சகோதரன் மூரை பற்றி இங்கு கூறினார், அல்லது சகோதரன் கிட்சன் இந்த சகோதரரில் ஒருவர் யார் என்று மறந்து விட்டது. சகோதரன் ஜாக்குடன் நெருக்கம் கொண்டேன். நான் இங்கு வந்தேன். அவருடைய அழகான அம்மா எங்கேயோ உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வயிற்று பிரச்சனை இருந்தது நாங்கள் ஜெபித்தோம். அவர்கள் குழந்தைகள் உண்ணும் உணவை தான் புசித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் ஜெபித்த பின், எப்பொழுதும் எல்லோரும் புசிக்கிற உணவையே புசிக்கிறார். அது, எப்படி-! எப்படி-! என்ன ஒரு உயிர்மிட்சி. எப்படி-எப்படி, என்ன ஒரு பெரிய எழுப்புதல் உருவாகிறது, அதற்கு தலைமை தாங்கின பில்லிகிரஹாம் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ், மற்றும் டாமி ஆஸ்போர்ன், பெரிய மனிதர், போர்வீரர்கள், அந்தச் சிறியதிலிருந்து வெளியேறி... எழுப்புதலில் இருந்து பெரிய காரியங்களைச் செய்தார்கள். 93. அன்றொரு நாள், அங்கு கீழே 33 அல்லது 34 வருடங்களுக்கு முன்னால், ஓஹோயோ ஆற்றங்கரையில், அந்த பாலத்தின் மீது, சுமார் 5000 ஜனங்களுக்கு மேல் கூடி இருந்தனர். எனக்கு 20 அல்லது 23 அல்லது 22 அல்லது 24 வயது இருக்கும். என்னுடைய முதல் எழுப்புதல் அதுவே. நான் 500 பேர்களுக்கு, அந்த மதியம் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன், டீக்கன்மார்கள் என்னை தண்ணீருக்கு வெளியே கொண்டு வந்தார்கள். 17-ஆவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில் ஒரு சத்தம் பேசுவதை கேட்டேன். "மேலே பார்" நான் மேலே பார்த்தேன், அப்போது எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. இதோ அந்த மேக ஸ்தம்பம் நீல வானத்தில் பிரகாசமாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜூன் 17ஆம் தேதி, மதியம் இரண்டு மணிக்கு, வானத்தை விட்டு வெளியே கீழே வந்து கொண்டிருந்தது. அந்த சத்தம் கர்ஜித்துக் கொண்டு, அங்குள்ள எல்லா இடங்களிலும், சொன்னது என்னவென்றால் “கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போலவே, நீ பெற்றிருக்கிற ஒரு…ஒரு செய்தியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோட்டத்தைக் கொண்டு வரும்” என்று உரைத்தது. புகைப்படக்காரர்கள் அதை படம் பிடித்தனர். 94. வெறும் மோசமான இலக்கண பள்ளி படிப்பைக் கொண்டு எப்படி அதை நம்புவோம்-? இன்றும் அது போலத் தான். ஆனால் அதை நம்புகிறேன். அந்த மதியம், ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். அவர்கள் வந்து என்னை வெளியே கொண்டு வரவேண்டி இருந்தது. அந்த தண்ணீரின் இழுப்புக்கு என்னால் நிற்க முடியவில்லை. 95. அந்த வெளிச்சம் சென்று, கீழே வந்த போது அதை படம் பிடித்தனர், அது அசோசியேடட் அச்சகத்தில் உள்ளது, உலகம் முழுவதும் சென்றது, கனடாவிற்கும் சென்றது. சகோதரன் லீ வேயில், அதை அசோசியேட் அச்சகத்தில் இருந்து ஒரு பிரதியை பெற்று தன்னிடம் வைத்து உள்ளார் என்று நான் நினைக்கிறேன். 96. இண்டியானாவில் உள்ள ஜெபர்சன்வில்லுள்ள ஸ்பிரிங் ஸ்ட்ரீட் அடிவாரத்தில், ஒரு உள்ளூர் பாதிரியார் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மர்மமான வெளிச்சம் அவர் மீது தொங்கிக் கொண்டிருந்தது. இதை படம் எடுத்து அங்கிருந்து சென்று விட்டனர், பின்பு அசோசியேடட் அச்சகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்போது அது அநேக வருடங்களுக்கு முன்னால் நடந்தது. எப்படி அது இருக்க முடியும்-? ஆனால் அது அப்படித் தான் இருந்தது. அது சரியாக உள்ளது. மற்றும் என்ன ஒரு முக்கியமான காரியம் அதில் என்ன என்றால், "நமக்கு ஒரு ஜீவிக்கிற தேவன் உண்டு". அங்கிருந்து, அந்த எழுப்புதல் நெருப்பானது உலகம் எங்கும் சென்று விட்டு, இப்பொழுது பெரிய சுகம் அளிக்கும் கூட்டங்களுக்கும், பெரிய இரகசியமான காரியங்கள் நடக்கின்றன. 97. உங்களிடம் முதல் முறை உங்கள் மத்தியில் வரும் போது, நான் சொன்னேன், "உங்களின் கரங்களை பிடித்துக் கொண்டு, அப்படியே ஒரு தொடர்புக்கு உள்ளாக நின்று கொண்டு இருப்பேன்" என்று, நான் என்ன பேச போகிறேன் என்று தெரியவில்லை. அதன் முடிவு இப்போது கண்டீர்களா, இப்பவும் அது நடக்கிறது. அப்படியே அதை பாருங்கள். 98. பின்பு அவர் என்னிடம் சொன்னார், "நீ உண்மையாக இருந்தால் மற்றவர்கள் உள்ளத்தில் உள்ள இரகசியங்களை அறிய வைப்பதாக அமையும்" என்று. அது அப்படியே ஆனது, சரியாக-! அப்படியே ஆனது. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து, நான் கனடாவில், ரேஜினாவில் உள்ள குயின் சிட்டியில், டாக்டர் எரன் பாக்ஸ்டருடன் நின்று கொண்டிருந்தேன். அந்த மேடையை ஒரு மனிதன் குறுக்கே நடந்து சென்றார். நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த மனிதனின் பெயரை கூப்பிட்டு, அவருடைய காரியம் என்னவென்று கூறினேன். அது அப்படியாக சென்றது, அன்றைய தினத்திலிருந்து அது அப்படியே நடந்துக் கொண்டு இருக்கிறது. 99. இப்போது, அது மற்றொரு கட்டத்திற்குள் வந்தது, அதை என்னால் கூற முடியாது. ஆனால் அது அதற்காக பேசும். 100. ஆனால் நினைவு கொள்ளுங்கள், இந்த பெரிய சுவிசேஷம், ஒரு எழுப்புதல் நெருப்பை உண்டாக்கி, உலகமெங்கும் சென்றது. இந்த கடைசி சில ஆண்டுகளாய், அந்த எழுப்புதல் எந்த எழுப்புதலை காட்டிலும், சரித்திரத்தில் அறியாத அளவிற்கு அதிகமாக நீடித்திருக்கிறது. எந்த ஒரு வரலாற்றாசிரியரும் ஒரு எழுப்புதல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததாக கூற மாட்டான். ஆனால் இது 15 வருடங்களுக்கு மேல், நேரே சீராக சென்று கொண்டிருக்கிறது. 101. ஆனால் அந்த எழுப்புதல் மரித்து விட்டது. சற்று அரிதாக மட்டும் தான், பின் பின்மாரி மழைக்கு சென்று ஒரு சிறிய வால் மட்டும் அது போன்று, இங்கிலாந்தின் ஊடாக துடைத்துக் கொண்டு, முற்றிலும் மறைவதற்கு முன், இப்படித்தான் முடிவுற்றது. சபை மீண்டுமாக லவோதிக்கேயாவில் சீரமைத்துக் கொண்டது. அதின் காலத்தை நிறைவேற்ற அது அப்படித் தான் இருக்க வேண்டும். சரியாக அந்த வழியாகத் தான் இருக்க வேண்டும். இன்று இரவு, நாம், அந்த மீதமுள்ள எழுப்புதலின் சிறிய பருக்கைகளின் மீது விருந்துண்டு கொண்டிருக்கிறோம். 102. அன்று, அந்த சீஷர்கள் அந்த நாட்களின் எழுப்புதலில் மகிழ்ந்து, மறுநாளுக்கு உரிய எழுப்புதலுக்கு காத்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் இயேசு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். ஒரு வேளை அவர் ஏழாம் நாளில் ஓய்வெடுப்பதைப் போல, எழுப்புதல் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம்; அவர் பூமியை ஆறு நாட்களில் படைத்த பிறகு, வேதாகமம் கூறுகிறது, “அவர் ஓய்வெடுத்தார். அவர் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். சரி, ஒரு வேளை அவர் அதைத்தான் செய்து கொண்டிருந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். 103. திடீரென்று உபத்திரவம் வந்தது. ஓ-! சபை சற்று ஓய்வெடுக்கட்டும. பின்பு உபத்திரவம் வரும். கப்பல் அங்குமிங்குமாக ஆடி, அதன் பாய்மர துணிகள் பறந்து சென்று விட்டன. அந்தப் படகிற்குள் தண்ணீர் நிரம்பிற்று. தப்பி பிழைப்போம் என்ற நம்பிக்கை எல்லாம் அற்றுப் போயிற்று. அவர் எல்லா அதிசயங்களையும் செய்ததை பார்த்தும் பிரச்சனைகள் வரும் போது.., 104. இப்போது, இங்கே நான் சில நிமிடங்களில் முடிக்க போகிறேன், காரணம் நாம் ஜெப வரிசையை தொடங்க போகிறோம். 105. நாம் அந்த எல்லா காரியங்களையும் பார்த்தோம். ஜனங்களின் நன்மைகளையும், தீமைகளையும் பார்த்தோம். மேலும், இப்போது ஒருவித அலட்சியப் போக்கு உள்ள இடத்திற்கு வந்துள்ளோம். அவர் என்ன செய்தார் என்றும், அது போல என்ன செய்வார் என்பதை பற்றி, பேசி கொண்டு வந்தோம். அது மனுஷீகம், மனுஷன் எப்பொழுதுமே ஆண்டவர் என்ன செய்தார், என்ன செய்யப் போகின்றார் என்பதை பற்றி, நம்புவதை சொல்லி கொண்டு இருப்பானே தவிர, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடுவான். 106. அவர்கள் அதே காரியத்தை தான் செய்தனர். அவர் வியாதியஸ்தரை சுகமாக்கினதையும், மரித்தவர்கள் எழுப்பினதையும், பின்வரும் காரியங்களை குறித்து அறிந்ததையும், மக்களின் இதயத்தில் உள்ள இரகசியங்களை சொல்வதையும், நன்கு பார்த்து, அறிந்தும், மேலும், மற்றுமொரு எழுப்புதலுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிந்த பின்னும், பிரச்சனைகள் வரும் போது, அவற்றையெல்லாம் மறந்து விட்டனர். 107. அதே போல தான் நாமும் செய்கின்றோம். அங்கு தான் இந்த இரவு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அதே இடத்தில், மேலும் அவர் கப்பலில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து இருந்தோமானால், அவர் இப்பொழுதும் அந்த கப்பலில் மகா பெரிய மகத்துவமானவராய் படுத்திருந்ததைப் போல இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம். விண்வெளியில் இருந்து உலகத்தை சிருஷ்டித்த போது இருந்த அந்த மகத்துவமானவர் தான் அவர் என்று அறிந்து கொள்வோம். மோசேயோடு செங்கடலில் இருந்த அதே மகத்துவமானவர் தான், இப்போதும் இருக்கிறார். இன்னும் லாசருவை கல்லறையில் இருந்த எழுப்பின அதே மகத்துவமானவர் தான் அவர். குஷ்டரோகியை குணமாக்கியும், குருடருக்கு பார்வை கொடுத்த அதே மகத்துவமானவராகவே இன்றும் இருக்கிறார். அவர் வேல்ஷ் எழுப்புதலிருந்த நாட்களில் இருந்த அதே மகத்துவமானவர் அவர். எந்த நேரத்திலும் இருக்கிற மகத்துவமானவர் தான் இப்போது இந்த கப்பலில் இருக்கிறார். 108. உபத்திரவங்கள் வரும். நாம் பல இடங்களுக்கு செல்கிறோம், சபைகளில் அமளியும், வம்பு பண்ணுவதை கண்டு, அதைக் கிழித்தெறிகிறோம். உங்களுக்கு தெரியுமா-? அது ஒரு சபையை சீரழித்து விடும். ஒன்றாய் இருங்கள். நம்முடைய இருதயங்களை கிறிஸ்துவின் அன்பிற்குள் ஒன்று சேர்க்கும் கட்டுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக நெருங்கிய உறவுகளின் மனதின் தோழமையானது மேலே உள்ள மேலே உள்ளது போல் இருக்கிறது. (கர்த்தருக்குள் இருக்கும் பிரிக்க முடியாத அன்பும் விசுவாசமும் போல). 109. ஆனால் இப்போது நாம் பார்க்கிறோம், தண்ணீர் வரத்து மிகவும் குறைவாய் உள்ளது. நான் தங்கி இருக்கும் டுசானில் என்னுடைய நாட்டில், ஒரு ஒட்டி உண்டு. எதை பார்த்தாலும் ஒரு ஒட்டி உண்டு, காரணம் இங்கு அவ்வளவு வறட்சி. இப்போது, தாவரங்கள் இந்த நாட்டில் வளரக் கூடியதாய் இருக்குமானால் நிஜமாகவே, மென்மையான இலைகளை உடையதாய் இருக்கும். அந்த ஒட்டி ஒரு மிகவும் நெருக்கமாகவும், கூர்மையாகவும், சுருட்டின இளையாய் இருந்தது. எந்த ஒரு ஆயுதமும் அதைப் போல வடிவமைக்க முடியாது, ஒரு ஆயுதமும் கூட ஒரு குதிக்கிற கற்றாழை போல வடிவமைக்க முடியாது. காரணம் மேலிருந்து கீழ் வரைக்கும், தாடியை போன்ற கொக்கி அதற்கு உண்டு. அதைப் போல் எந்த ஆயுதத்தைக் கொண்டும் உங்களால் வடிவமைக்க முடியாது. ஆனால் இயற்கை அதை செய்திருக்கிறது. அது உன் மேல் அப்படியே குதிக்கும். நீ அதன் அருகில் போக வேண்டாம். அது உன் மேல் வரும். 110. பாவமும் அது போல தான். நீ அதன் அருகில் போக வேண்டாம். அது உன் மேல் வந்து விடும். அது உன் மேல் குதித்து விடும். அதை சுற்றி வர வேண்டாம். அவிசுவாசத்திலிருந்து தூரம் விலகி இருங்கள். ஆனால் நாம் அந்த நேரத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 111. ஆகையால், அவர் அநேக காரியங்கள் செய்ததை பார்த்திருந்தனர், பின்பு அதைக் குறித்து பேசவும் செய்தனர். ஆனால், உபத்திரவம் நேரிட்ட போதெல்லாம் மறந்து விட்டனர். 112. இப்போது அவர் செய்த பல காரியங்களை பார்த்து, அதைப் பற்றி யோசிப்போம், அந்த மகா பெரிய பரிசுத்த ஆவியானவர் இந்த கடைசி நாட்களில், இந்த மணி நேரத்தின் செய்தியாளர் என்ற அவருடைய சற்றும் தவறு இல்லாத வார்த்தை சாட்சியாக அடையாளப் படுத்தி காட்டி இருக்கின்றன. அந்த ஆவியானவர் தாம் நம்மிடம் நிறைவேற்றுவதாக வாக்கு உரைக்கப்பட்ட எல்லா வாக்குத்தத்தங்களையும், ஒவ்வொரு அடையாளத்தையும், ஒவ்வொரு கிரியைகளையும், மேலும் ஒவ்வொரு வார்த்தையும், அவர் செய்வேன் என்று சொன்ன விதமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதை சாட்சி நிரூபிக்கிறது. 113. அது மிகவும் தாழ்மையாக உள்ளது. அதை பெரிய உயர்ந்த பதவியில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்றால் நான் அதிலிருந்து விலகி விடுவேன். அது ஏற்றுக் கொள்ளப்படும் என்றால் அது அவ்வாறு இருக்காது. ஆனால், அது கீழே இந்த வழியாக இருப்பதினால் தான், நான் நம்புவதற்கு காரணமாய் உள்ளது. பாருங்கள்-! அங்கு தான் அது வர வேண்டும். அங்கு தான் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. 114. மேலும், இப்போது நாம் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறதை பார்க்கும் போது, நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்ததிருக்கிறோம். மேலும் என்ன நடந்தது-? இப்போது உபத்திரவங்கள் வந்தன. 115. இவை எல்லாவற்றையும் அவர் செய்ய கண்டோம். எப்படி நம்முடைய வீட்டு காரியங்களை நேர்படுத்தினார். எப்படி தாய் தகப்பன் மீண்டும் ஒன்று கூடிவர செய்தார். கணவனும் மனைவியும் எப்படி மீண்டும் கூடி வந்தார்கள் என்பதை கண்டீர்கள். அவர் உங்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார். கேன்சர் நோயினால் படுத்திருக்கும் போது அநேகர் அவர்களை பாட்டில்களிலும், கூஜாக்களிலும், பாத்திரங்களிலும், கொண்டு வந்தீர்கள். மருத்துவரின் அறிக்கை பரிசோதிக்கபட்டு, கையொப்பமிடப்பட்ட அறிக்கைகள், என்னிடம் அடுக்கடுக்காக ஒரு பெரிய பெட்டி முழுவதும் வைத்து இருக்கிறேன். மேலும் மணிக்கணக்கில் மரித்திருந்த 5 பேரை உயிரோடு எழுப்பினதை, அநேகர் பார்த்து சாட்சி பகர்ந்தனர். அதில் அதிக நேரம் மரித்து போய் இருந்த ஒருவரை அறிவேன். அவர் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரைக்கும் மரித்து போயிருந்தார். பாருங்கள்-! 116. இல்லை உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன், அங்கு ஒரு சிறு குழந்தை அந்த குழந்தையின் தாய் முழு இரவும் அவள் கரங்களில் ஏந்திக் கொண்டிருந்தாள். அது மதியமே இறந்து விட்டிருந்தது, இரவு முழுவதும் குழந்தையை சுமந்தவளாய், கலிபோர்னியாவிலிருந்து கூட்டத்திற்கு அவள் வந்தாள். அந்த மதியம் நான் பேசிக் கொண்டிருந்தேன். முந்தின நாள் மதியம் அந்த குழந்தை இறந்து விட்டடிருந்தது, அவள் இரவு முழுவதும் வண்டியை ஓட்டிக் கொண்டே அந்தக் கூட்டத்திற்கு வந்தாள். உள்ளே அவளால் வர முடியவில்லை. அவள், முந்தின நாள் மரித்துப் போயிருந்த ஒரு குளிர்ந்த உருவமாக இருந்த ஒரு குழந்தையை என் கரங்களில் வைத்தாள். அந்த குழந்தையை ஏந்தியவாறு நின்று கொண்டு ஒரு சிறு ஜெபம் செய்தேன், அக்குழந்தைக்கு உடம்பில் சூடு பிடித்தது. அவன் திரும்பிப் பார்த்தான், அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைத்தேன் உண்மை-! அது சரியா. 117. இப்போது அக்காரியங்களை பார்க்கும் போது, அது முற்றிலும் உண்மை என்றும், ஆராயப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் போது பின்னே ஏன் நாம் உபத்திரவத்தைக் கண்டு பயப்பட வேண்டும். 118. அவர்கள் எதை பார்த்துக் கொண்டிருந்தனர், அவர்கள் நடந்த காரியங்களை பற்றி எவ்வளவாய் சாட்சி பகர்ந்தனர். அவர்கள் யார் தங்களோடு இருந்தார் என்பதை மறந்தனர். அவர்கள் அப்போது மறந்து இருந்த காரணம் பிரச்சனைகள் வந்ததால். 119. இப்போது இருக்கிறதைப் போல, தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நமக்கு உண்டு. 120. படகின் பாய் மரத்துணிகளைக் கொண்டு முயற்சித்தனர், காற்று மிகவும் பலமாக இருந்ததால் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அவர்கள் துடுப்புகளைக் கொண்டு முயற்சித்து இருந்தனர், ஆனால் அலைகள் மிகப் பெரிதாக இருந்ததால் துடுப்புகளை உடைத்து போட்டது. சுக்கானால் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வர முடியவில்லை. பின்பு அவர்கள் சிறு கப்பல் செல்வதற்கு விட்டு விட்டனர். அதை செய்த மாத்திரத்தில் அது எந்த பக்கத்திலானாலும் செல்லட்டும் என்று விட்டு விட்டனர். அது தண்ணீரில் மோதி அடித்துக் கொண்டு சென்றது. 121. நீங்கள், ஒரு படகை ஓட்டும் போது, ஒரு ஒரு அலையோடு ஒட்ட வேண்டும். படகை ஓட்டுகின்ற நீங்கள், உங்களுக்கு நன்றாக தெரியும், ஒரு காற்றோடு எதிர்கொள்ள முடியாது என்றும், ஒரு அலையோடு எதிர்கொள்ள முடியாது என்றும், அப்படி செய்வீர்கள் என்றால், உங்கள் படகை அடியில் செலுத்தி விடுவீர்கள். ஆகையால் ஒரு படகை அலையோடு பாதுகாப்பாக நடத்தி செல்ல வேண்டும். அது உருண்டு சொல்லட்டும். அலைகள் உருளும் போது நீங்கள் அதினூடே உள்ளே வெளியே உருளுவீர்கள். நீங்கள் அப்படி... அப்படி செய்யயாவிடில், உங்கள் படகு முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடும். 122. நல்லது எல்லாமே உடைந்த பிற்பாடு, அவர்களால் எதையுமே கையாள முடியாத போது, அந்தப் படகை அப்படியே செல்ல விட்டு விட்டனர். அந்தப் படகுக்குள் தண்ணீர் நிரம்பிற்று. எல்லா நம்பிக்கையும் இழந்த நிலையில் காணப்பட்டது. அங்கு தான் எல்லா பிரச்சனைகளும் இருந்தன. என்ன ஒரு நேரமாக இருந்திருக்கும்-! அதற்கு மேல் எந்த தீர்வும் காண முடியாத பிரச்சனையாயாய் இருந்திருக்கும். எந்த தேர்வும் காண முடியாத நிலையில், பயமும் உள்ளே நுழைந்தது. 123. நாமும் இப்படிப்பட்டதோர் பிரச்சனையை சந்தித்திருக்கிறோம்.., தீர்வு காண முடியாத, தேசத்தை சார்ந்த பிரச்சனைகள். நமது ஜனாதிபதியை சுட்டுக் கொன்ற அந்த கொடூரனை பாருங்கள். பின்பு சென்று அந்த சிறுவனையும் சுட்டான். என்னை பொருத்தமட்டில் ஜனாதிபதியை கொன்ற கொடூரன் ஒரு குளிர்ந்த கொலை பாதகத்தை (மனிதாபமற்ற கொலை) செய்தான். ஆனால், அதை மேற்கொள்ள முடியவில்லை என்றால், தொடர்ந்து அச்செயலை செய்வான். அதை மேற் கொள்ளவே முடியாது. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்று சற்று பாருங்கள். இந்த உலகம் முழுவதிலும், ஒவ்வொரு சபையிலும், ஒவ்வொரு ஜில்லாவிலும், ஒரு ஆபிரஹாம் லிங்கனை போட்டால், அவர்கள் தொடர்ந்து அதே காரியத்தைத் தான் செய்வார்கள். பாருங்கள் அது பிரச்சனைகள். அதற்கு தீர்வு காண முடியாது. அந்தப் பாவம், அவிசுவாசம், தீங்கு நமக்குள்ளே வேரூன்றி, நம்மை சுற்றி வளர்ந்த, முழு தேசத்தையும் மூடிக் கொண்டது. 124. நமக்கு சபை பிரச்சனைகள், வாக்குவாதங்கள், அமளி பண்ணுதல், ஆகியவைகளுக்கு தீர்வு காண முடியாமல் இருப்பது போல் உள்ளது. அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரியும். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி உலக ஐக்கிய சபையை நிர்வகிக்க முற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் அதற்கு தீர்வு காண முடியாது. 125. நாம் வார்த்தையை அறிமுகப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன் உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும், அவ்வாறே இருக்கிறார் என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் திருப்பிக் கொண்டு முதுகை அதற்கு காண்பித்து கடந்து சென்று விட்டனர். அவர்கள் அவிசுவாசிகள். பாவன விசுவாசிகள் இன்னும் அதில் எவ்வளவு, எவ்வளவு குற்றங்களை கண்டுபிடிக்க முடியுமோ, அப்படியே இன்னும் தொங்கிக் கொண்டு இருக்கின்றனர். மீண்டும், மீண்டும் அப்படியே செய்கின்றனர். ஆனால், அது என்ன-! அதே காரியம் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 126. வார்த்தையை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். எல்லா காரியங்களுக்கும் தீர்வு என்ன-? அது கர்த்தர். பரிசுத்த யோவான் ஒன்றாம் அதிகாரம் சொல்லுகிறது, "அவரே வார்த்தை என்று" பின்னும் இதிலிருந்து வெளியே வர இன்னும் நமக்கு வார்த்தை இருக்கிறது. உலக ஐக்கிய சபை அதற்கு தேவையில்லை, இந்த வார்த்தையோடு கலந்த கோட்பாடுகள் நமக்குத் தேவை இல்லை. நமக்கு இங்கே வேதாகமம் உண்டு. இதை எப்படி செலுத்துவது என்று சொல்லுகிறது. வேதாகமத்துக்கு திரும்புங்கள், செய்திக்கு திரும்புங்கள், அது கிறிஸ்து நமக்குள்ளே, நாம் தான் அந்த வேதாகமம். அது உயிருள்ள வேதாகம். "நீங்களே அந்த எழுதப்பட்ட நிருபங்கள்." ஜீவனுள்ள வேதாகமம் கர்த்தருடைய வார்த்தை உங்களுக்குள்ள வாசம் செய்கிறது-! அது தான் நமக்கு வேண்டும். 127. இது தான் கம்யூனிசம் (பொது உடைமை கொள்கை) ரஷ்யாவில் எழும்ப செய்தது. கம்யூனிஸ்டுகள் பெரிய கட்சி கிடையாது. இப்போ ஒரே ஒரு சதவீதம் தான் கம்யூனிஸ்டுகள், 99 சதவீதம் சுயாதீனர். ஆனால் அவர்கள் அரசாட்சி செய்கின்றனர். அவர்கள் தான் ஆட்சி செய்கின்றனர். முதலாவது ஏன் அப்படி எழும்பினது. சபையில் தென்பட்ட ஊழல். அது தான் அதை செய்தது. சபைக்குள் மக்களிடம் இருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு, பின் அதே ஜீவியம் தான் ஜீவித்தனர். மற்ற எந்த ஒரு விடுதியை போன்று தான் அது இருந்தது. மக்கள் அவர்களால் வெறுப்புற்று, சோர்ந்து போய்விட்டனர். இப்படித்தான் கம்யூனிசம் பிறந்தது. 128. அப்படித் தான், உலகப்பிரகாரமான காரியங்கள் இங்கே பிறந்திருக்கிறது. அதனால் தான் உலக சபைகளின் குழுமம் (World Church Council) பிறந்திருக்கிறது. அதனால் தான் நாம் இந்த அரசியல் கூட்டுக்குள்ளே சென்று இந்த காரியங்களை செய்கிறோம். காரணம் அவர்கள் வார்த்தையை புறக்கணித்து விட்டனர். ஏன், போதகருக்கு பணம் செலுத்துவதற்காக அவர்கள் இரவு உணவை (Soup Supper) சபையில் வைத்து உள்ளனர். காரணம் கர்த்தர் சொன்ன பிரகாரம் தசமபாகம் செலுத்தாமல் புறக்கணித்ததால் தான். ஏன் ஒரு கோட்பாட்டை பின்பற்றுகின்றனர். வேதாகமம் வேண்டாம் என்பதால் தான். ஏன் ஒரு தவறான காரியத்தை ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை வேண்டாததினால் தான். 129. கீழ்தளத்தில் கண்களை மூடிக் கொண்டு ஒருவன் ஓடி, "சூரியன் பிரகாசித்துக் கொண்டு இருக்கவில்லை" என்று சொல்வானானால், அவனுக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை, ஆனால் வெளியே வந்து மேல பார்க்க முற்பட்டு, சூரியன் பிரகாசித்து கொண்டு இருப்பதை பார்த்து, அதன் ஆசீர்வாதத்தால் களி கூர்ந்தால், அது சரி. ஆனால் அப்படி அவன் செய்யாத பட்சத்தில், நாம் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் அவன் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான் என்று சொல்வீர்கள். 130. நல்லது, கர்த்தருடைய வார்த்தை கொள்கைகளுக்கு எதிர்ப் பதமாக இருக்கும் பட்சத்தில், அதை கர்த்தருடைய வார்த்தைக்கு பதிலாக ஏற்றுக் கொள்கிறவன், ஏதோ ஆவிக்கு உரியதில் தவறாக இருக்கிறான். 131. இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட அந்த நாளில், பரபாஸ் ஒரு கொலை பாதகனாக இருந்த போதும், வார்த்தைக்கு பதிலாக அவனை ஏற்றுக் கொள்ள விருப்பமாய் இருந்தனர். இன்றைக்கும் கர்த்தருடைய வார்த்தையை கொலை செய்கிற அந்த குழுமத்தில், அடையாளப் படுத்தப்பட்ட கர்த்தரின் வார்த்தைக்கு பதிலாக எடுத்துக் கொள்கின்றனர். அதே காரியம். அது தான் நாம் அடைந்துள்ள பிரச்சனை. 132. இப்போது, அவருடைய சீஷர்கள் சில வேலைகளில், பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்வது உண்டு. மருத்துவர்கள் சரீர நோய்களுக்கு தீர்வு காண முடியாமல் இருப்பது போல, ஒரு வேளை இப்படி சொல்லலாம் உனக்கு கேன்சர் நோய் முற்றிப் போய் இருக்கிறது போல தோன்றுகிறது. ஒரு வேளை முற்றி போன காசநோய் அல்லது ஏதோ ஒரு வித கஷ்டம் உனக்கு உண்டு. நாம் அவர்களைப் போல கப்பலில் யார் இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். 133. ஒரு புயல் அடித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது கர்த்தர் வீசும் காற்றை படைத்தார். கர்த்தர் காற்றை படைத்தார். ஆண்டவர் தண்ணீரை படைத்தார். அதெல்லாம் அவரின் சிருஷ்டிப்பு. அவரே அவைகளை உண்டாக்கினார். அதை பாருங்கள்-! அந்த சாத்தான் அதற்குள் சென்று சவுக்கினால் அடித்து விட்டான். அது தான் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அது சாத்தான். மேலும் அவர் சிருஷ்டிகராக இருப்பாரானால், ஆதியிலே அப்படியே சிருஷ்டித்த அவர் தான், அங்கேயே படுத்துக் கொண்டு இருக்கிறார். உடனே அந்த புயலை நிறுத்துவார் என்று அந்த சீஷர்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதல்லவா-? ஆமென். 134. கர்த்தர் உன்னை சுகத்தோடு இருப்பதற்காக படைத்தார். சாத்தான் உள்ளே நுழைகிறான். அவன், "அந்த புயல் அவருக்கு கீழ்ப்படிந்தது போல், அவனும் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் அல்லவா-?" அவர், உன்னுடைய சரீரத்தை உண்டாக்கினார், ஒரு மனுஷனாக படைத்தார், உனக்கு கண்களை படைத்தார். சுகத்தையும் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக நீ சுகத்தை பெற்று, செழிப்பாய் இருப்பதற்காக. அந்த சாத்தான் தான் அங்கு நுழைகிறான். சரி, அவர் இன்றைய இரவு ஒரே ஒரு காரியத்தை செய்ய தயாராக இருக்கிறார்... மற்ற எழுப்புதலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நாம் அவரை கூப்பிடுவதற்கு தயாராக இருக்கிறார். 135. அது நடக்கப் போகிறது என்று அவர் நன்கு அறிந்திருந்ததை அந்த சீஷர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்-? அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. அவருக்கு அது நடக்கும் என்று தெரியும். அது நிரூபித்துக் கொண்டு மாத்திரம் இருந்தது. அவர்கள் விசுவாசத்தின் பரீட்சையை மட்டும் நிரூபித்தது. அவர் தூங்கும் போதும் கூட, நான் சந்தேகிக்கிறேன். அவர் பின்னால் சும்மா தான் படுத்துக் கொண்டு இருந்திருப்பார். என்ன நடக்க போகிறது என்று அவருக்கு தெரியும். ஆமாம் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதற்கு சற்று காத்துக் கொண்டிருந்தார். 136. அங்கு அவர்கள் சாட்சிக் கொடுப்பதை கேளுங்கள். "கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக-! அவர் தான் மேசியா என்பதில் திருப்தி கொள்ளுகிறோம்." ஓ மகிமை-! அல்லேலூயா... எங்களுக்கு அது தெரியும், அது தான் உண்மை. மேலும், அவர்கள் சொல்வது நான் பார்த்துக் கொள்கிறேன், எல்லாம் சரி, சாத்தானே இப்போது உன் கட்டுகளை அவிழ்த்துக் கொள். 137. அங்கே பாருங்கள் ஓ, எல்லா நம்பிக்கையும் இழந்து விட்டார்கள், ஓ-! நாங்கள் மடிந்து போகிறோம். ஓ-! பையன்களே (நண்பர்களே) நாம் என்ன செய்ய முடியும்.-? மேலும், அவர்கள் பேசிக் கொண்டிருந்த, அந்த சிருஷ்டிகரே அங்கு அவர்களோடு படித்துக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா. 138. பரிசுத்த ஆவியை கொடுத்த அந்த ஆண்டவரே, பெந்தகோஸ்தே நாளில் விழுந்த அதே பரிசுத்தாவியே, இன்றைய இரவு, நம்மோடு கூட இங்கே இருக்கிறார், ஆமென்-!. மரித்தவர்களை உயிரோடு எழுப்பின அதே ஆண்டவர், வியாதியஸ்தரை குணமாக்கினவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், நம்மோடு கூட இருக்கிறார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 139. ஒருவேளை அவர் இந்த சரிவு வர அனுமதித்திருப்பார். காரணம் நீ என்ன செய்யப் போகிறாய் என்று பார்ப்பதற்கு. அவர் அப்படித்தான் செய்வார். உன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்கவும் நீ என்ன செய்யப் போகிறாய் என்று பார்ப்பதற்கு அவர் அப்படி தான் செய்வார். ஓடிப் போய் விடுவாயோ-? வேதாகமம் இப்படி சொல்லவில்லையா-? அவர் மேல் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாய் நடக்கிறது. 140. அவர் யார் என்பதை முற்றிலும் நிரூபித்து விட்டார். அன்றைக்கு, அவர் யார் என்று அன்று நிரூபித்ததைப் போல் இன்றும் நிரூபிக்கிறார். அவர் அதே மேசியா தான் என்றும், இன்றும் அதே போல தான், அவர் இப்பவும் வார்த்தையாக இருதயத்தின் எண்ணங்களையும், நோக்கத்தையும் வகையறுக்கத் தக்கவராய் இருக்கிறார். எப்பொழுதும் இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கத் தக்கவராய் இருப்பது போல, இப்போதும் செய்கிறார். எப்பொழுதும் சுகம் அளிப்பவர் போல் இப்போதும் செய்கிறார். அப்போது சிருஷ்டித்ததைப் போல இப்பவும் சிருஷ்டிக்கிறார். இன்னமும் மரித்தவர்களை உயிர்பிக்கிறார். "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன்". என்றென்றைக்கும் இருப்பது போல் இப்பவும் இருக்கிறார். சரியாக, நமக்குள்ளே, நம் கப்பலுக்குள்ளே அதை நிரூபித்து இருக்கிறார். 141. பின்பு பிரச்சனைகள் நுழைந்தன, எல்லா நம்பிக்கையும் சென்றுவிட்டது. ஆமாம் அது சரி அல்லவா-? அது அப்படியே சீஷர்களை போல தானே-! அது சரி. 142. அவருடைய வார்த்தையினாலும், அடையாளங்களினாலும், அவர் யார் என்று நிரூபித்து காட்டி இருந்தார், அவைகள் முற்றிலுமாக, அங்கு இருக்கிற அவரை, யார் அவர் என்று நிருபித்து கொண்டிருந்தன. அவர் சொன்னார் "என்னை பற்றி எழுதி இருந்தவைகளை செய்யவில்லை என்றால், என்னை விசுவாசிக்க வேண்டாம்". ஆனால் என்னை பற்றி எழுதி இருந்த பிரகாரம் செய்வேனாகில், நான் சொன்னது உண்மை என்று நம்புங்கள். என்ன ஒரு-! என்ன ஒரு-!...... அது போல தான் இன்னறைக்கும் இருக்கிறது. "வேதத்தை தேடிப் பாருங்கள் அவைகள் என்னை பற்றி சாட்சி கொடுக்கின்றன" என்று அவர் சொன்னார். 143. அவர் தான் எல்லா சிருஷ்டிப்புக்கும், ஆண்டவர் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதாய் இருந்தது. அந்தக் காற்றையும், இந்த உலகத்தையும், அந்த தண்ணீரையும் செய்து இருந்திருப்பாரானால், அந்த சிருஷ்டிகர் அங்கே படுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் எல்லாவற்றின் மேலும் அவருக்கு வல்லமை இருந்ததை காண்பித்தார். அதை அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர் இருப்பதை மறந்து விட்டனர் காரணம், அவர் எப்பொழுதும் அவர்கள் முதுகை தட்டிக் கொண்ட "நீங்கள், முன் சென்று போங்கள், அந்த அதிசயம் இப்போது இங்கேயே நடக்கப் போகிறது. அது நடக்கும். ஏனென்றால் ஞாபகம் கொள்ளுங்கள் நான் உங்கள் பக்கத்திலேயே நின்று கொண்டு இருக்கிறேன். இப்பொழுது அது வருகிறது. பையன்களே, நாம், இப்போது சில நிமிஷங்களில் அதை பார்க்கலாமா-? "ஓ-! அவர் அப்படி செய்பவர் அல்ல. நாம் அவரை நம்புகிறோமா என்று அவர் தன்னிடம் வரும் மகனையும், மகளையும் சோதித்து பார்க்கிறார். ஆமாம் ஐயா-! அவர் செய்தார். அவர்கள் அவருக்கு கீழ்ப்படிய மாட்டார்கள். 144. நாம் இதையும் நினைவு கூறுவோம். அவர் நமது சரீரங்களை உண்டாக்கினார். அவர்கள் அவருக்கு கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். ஆனால் அவருக்கு அவர்கள் கீழ்படியவில்லை. இந்த சிறு..., 145. நான் உங்களை டெக்சாஸ் புழுதியில் இருந்தும், லூசியானா புழுதியிலிருந்து உண்டான மண் கட்டி என்று கூப்பிட்டேன். அந்தத் தரையில் இருந்த தான் எழுப்பப்பட்டீர்கள். அங்கு தான் மீண்டும் சொல்ல போகிறீர்கள். உங்கள் உடம்பில் வெறும் 16 வேதியப் பொருள்கள் மட்டும் உள்ளன. கொஞ்சம் நீர்ப்பசை, கொஞ்சம் பெட்ரோல், கொஞ்சம் பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், அப்புறம் கொஞ்சம் காஸ்மிக் கதிர்கள். நீங்கள் அதிலிருந்து தான் கொஞ்சம் முறுக்கி, ஒருங்கிணைந்து வந்தீர்கள். லூசியானவின் அழுக்கு அது மட்டுமே நீங்கள். ஆனால் நினைவு கூறுங்கள் ஏதோ ஒன்று உங்களை உண்டாக்கியது. எந்த ஒருவர் உங்களை உண்டாக்கினாரோ உன்னை வித்தியாசமான ஒன்றாக உண்டாக்க அவரே உன்னோடு வாழ வந்தார். ஓ-! என்ன-! ஓ-! எப்படியாகிலும் அந்த ஒருவரை நாம் பார்த்தாக வேண்டும். ஞாபகம் கொள்ளுங்கள். ஜீவனோடு சுற்றி சுற்றி வந்த இந்த தூசியான களிமண் கட்டி, ஜீவனை இழந்து மீண்டும் தூசியாக மாறும் என்று அவர் நமக்கு வாக்களித்துள்ளார், அதாவது இந்த சிறு களிமண் கட்டி அழுக்கு, மண்ணுக்கு திரும்பினாலும் மீண்டும்... 146. ஆனால் அவருடைய வார்த்தையில் என்ன கூறியிருந்தார், கடைசி நாட்களில் அதை மீண்டும் எழுப்புவேன் என்று, ஆமென்-!. நான் எழுப்புவேன். அவர் வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார். சரீரம் அழிந்த பிறகும், தூசியாக மாறி உடைந்து போன பிறகும், அது பூமியின் வாயுவாக மாறின பிறகும், அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இருந்த போதிலும் அன்றைய இரவு சொன்னது போல, "உன்னால் எதையும் அழிக்க முடியாது, மனிதனால் முடியாது." அழிவு இல்லை. மனிதனால் எதையும் அழிக்க முடியாது. கர்த்தர் ஒருவர் மாத்திரமே செய்ய முடியும். அவரால் முடியும். சரி ஒரு கரண்டி சாம்பலாய் இருந்தாலும் ஒன்றுமில்லை. அவர் சொன்னார், கடைசி நாட்களில் அதை எழுப்புவேன். அவர் நம்மோடு இருக்கிறார். எல்லாரும் அவருக்கு கீழ்படிகின்றனர். அந்த தூசி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஏனென்றால் அவர் அதைப் படைத்தார். காற்றும் அலையும் அவனுக்குக் கீழ்ப்படிந்தால், தூசியும் அவருக்குக் கீழ்ப்படிகிறது. ஆமென். எழுந்திரு-! அவர் நம்முடன் இருக்கிறார். அனைவரும் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள். 147. சீஷர்கள் சாலையின் முடிவில் அவரை கண்டு பிடித்த பிறகு, சிருஷ்டிகர் அவர்களுடன் இருக்கிறார் என்பது அவர்களில் சில சீஷர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். செய்து இருக்கலாம், அவர், அவர்களோடு எல்லா நேரமும் இருந்ததால், அவர் அதை செய்ய முடியும் என்பதை உணர்ந்து அவரிடம் சென்று அவரை எழுப்பினர்கள். 148. வேத வாக்கியங்கள் நிரூபிக்கப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டடிருந்தனர், மேலும் நாம் அப்படி இல்லை. இயேசுவை நாம் கூப்பிடும் போதெல்லாம் அவர் கடினமாக இருந்தது இல்லை. அவரிடம் சென்று ஓ-! எஜமானனே-! எழும்புங்கள், எழும்புங்கள், எழும்புங்கள்-! ஓ எஜமானனே எழும்புங்கள், என்று சொல்ல தேவையில்லை, இல்லை, இல்லை. 149. அவர்கள் சற்று "எஜமானனே" என்று கூப்பிட்ட மாத்திரத்தில், "நான் இங்கு தான் இருக்கிறேன்" என்றார். "நாங்கள் மடிந்து போவது உங்களுக்கு கவலை இல்லையா-?" என்றனர். அவர் அற்ப விசுவாசிகளே, உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று என்றார். 150. அப்படி தான் அவர் நம்மோடு கூட இருப்பதை மறந்து, இயேசுவை காட்சிக்குள் அழைத்து, அவரை செயல்பட வைக்கிறோம். ஜனங்கள் இன்றைக்கு சொல்வது எனக்கு மட்டும் நிச்சயமாக, அவர் தான் என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக எனக்கு தெரிந்திருந்தால்...... 151. எப்படி அவர்களுக்கு நிச்சயமாக தெரியும். எப்படி அந்த சீஷர்களுக்கு நிச்சயமாய் தெரிந்தது. இப்பொழுது கேளுங்கள், அவர் கல்வி கற்று இருந்தவர் அல்ல. நமக்கு தெரிந்த மட்டில் அவர் கல்வி கற்கவே இல்லை. அவருக்கு தேவனின் ஞானம் மட்டும் இருந்தது. ஆனால் உலக கல்வி அவருக்கு இல்லை. அவர் பள்ளிக்கு சென்றதாக எந்த ஆவணமும் இல்லை. ஆனால் ஒரு உயர்ந்த வேத பாதகராகவோ அல்லது ஒரு பிரசித்தம் பெற்ற ஆளாகவோ அவர் இருந்ததில்லை. நமக்கு அப்படிப்பட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லை. வெறும் சாதாரண மனிதன். ஆனால் எப்படி அவர்களுக்கு தெரிந்திருந்தது. இப்போது கூர்ந்து கவனியுங்கள். இதை தவற விட வேண்டாம். மீதமுள்ளவர்கள் எப்படி அதை நிச்சியத்திருக்க முடியும். நமக்கு தெரியும் அவர்தான் அந்த கிறிஸ்து என்று-? அவர்களுக்கு எப்படி தெரியும்-? ஏனென்றால் அந்த வாக்களிக்கப்பட்ட வார்த்தை நிரூபிக்கப்படுத்தப்பட்டிருந்தது, மறு வார்த்தையில் சொல்வோம் என்றால், அவர் வெளிப்படுத்தப்பட்டிருந்ததார். அவர் அறிவிக்கப்பட்டிருந்தார். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவனுள்ள வார்த்தை, ஜீவனை பெற்று அந்த சரீரத்தின் மூலமாக முன் நிறுத்தப்பட்டு இருந்தது. கர்த்தர் அவருக்குள் இருந்தார் என்று அவர்களுக்கு தெரியும். 152. பேதுரு சொன்னான் இஸ்ரவேலரே, யூதேயா மனிதர்களே, நசரேயனாகிய இயேசு கிறிஸ்து உங்கள் மத்தியில், கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட மனிதன், என்பதை அவர் மூலமாக கர்த்தர் செய்த காரியங்கள் நிரூபிக்கிறது. 153. நிக்கோதேமு, அந்த பெரிய படித்த மேதாவி, இரவு நேரத்தில் வந்து சொன்னார்." ரபி நீர் கர்த்தரிடத்தில் இருந்து வந்தவர் என்று அறிவோம்,". ஏன் அவர் அப்படி சொன்னார்" கர்த்தர் உம்மோடு இல்லையென்றால், நீர் செய்கிற காரியம் ஒருவராலும் செய்ய முடியாது". ஆனால், ஏன் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் அவரால் முடியவில்லை. பாருங்கள். அது அவர்களுடைய பாரம்பரியத்திற்கு முரனானதாய் இருந்தது பாருங்கள். 154. ஆமாம்-! அவர் தான் அவர், என்று அறிய ஒரே ஒரு வழி தான் அவர்களுக்கு இருந்தது. காரணம் அவர், அந்த நாளுக்காக முன் சொல்லப்பட்ட கர்த்தருடைய வார்த்தையாக அவர் வாழ்ந்ததால் தான். உங்களுக்கு புரிந்ததா-? எத்தனை பேர் தெளிவாக புரிந்து கொண்டீர்கள். கைகளை சற்று உயர்த்தவும். பாருங்கள், அந்த நாளுக்குரிய வாக்குத்தத்த வார்த்தையாக அவர் வாழ்ந்து காட்டினார். அவர்கள் அவர் தான் மேசியா, என்று நிச்சயத்துக் கொண்டார்கள். 155. அதை தான் அந்தப் பெண் கூறினாள் அவள் கூறியதாவது இப்போது, இங்கே பாருங்கள்-! 400 வருடங்களாக நமக்கு எந்த தீர்க்கதரிசியும் இல்லை. ஆனால் அடுத்து காட்சிக்கு வரும் தீர்க்கதரிசி, மேசியாவாகத் தான் இருக்க வேண்டும் என்று நமக்கு தெரியும். இதோ இங்கு ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய காரியம் எல்லாவற்றையும் சொன்னார். எனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்று சொன்னார். இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சி. பின், அந்த மனிதன், அந்தப் பட்டணத்தை கிணற்றின் அருகே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் எனக்கு ஐந்து புருஷர்கள் உண்டு என்று கூறினார். இந்த அடையாளங்கள் அல்லவா அந்த மேசியா செய்தாக வேண்டும். அவரே வார்த்தை. உள்ளந்திரியங்களில் உள்ள எண்ணங்களை ஆராய்ந்து அறிகிறவர் அவர் தான் அல்லவா-? இந்த காரணத்தினால் தான் ஜனங்கள் அவர் மேசியா என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். 156. அதே வழியில் தான், அவர் மேசியா என்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால் வேதாகமம் சொல்லுகிறது அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். மேலும் கடைசி நாட்களில் மீண்டும் இதை செய்வதாக அவர் வாக்களித்து உள்ளார். நல்லது அவரை சிலுவையில் அறைந்தனர், ஆனால் மீண்டும் அவர் உயிர்த்தெழுந்தார் 157. கீழே, மெக்சிகோவில் ஒரு சிறு குழந்தையை உயிரோடு எழுப்பினதை, நான் சகோதரன் மூரோடே பேசிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்குப் பின் என்னை ஒரு நேர்காணலுக்கு அழைத்தனர். சபை அதை செய்தது. செய்தியாளர்கள் என்னிடம் கூறினார். 158. இப்போது, இங்கே ஒரு கத்தோலிக்க மார்க்கத்தார் யாராவது இருந்தால், உங்கள் மீது நான் ஒன்றும் குற்றம் சாட்டவில்லை. என்னுடைய ஜனங்களும் கத்தோலிக்கர்கள் தான். ஆனால் பாருங்கள் அவர்கள் அருமையான மக்கள். அவர்கள் நம்மைப் போல் தேவனுக்காக பசி தாகம் கொண்டிருக்கின்றனர். 159. அந்த செய்தியாளர் சொன்னார் அது மிகவும் ஒரு முக்கியமான கவனிக்கத்தக்க செயல். மேலும் அவர் சொன்னார், எங்களுடைய பரிசுத்தவான்கள் அதை செய்ய முடியுமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? நான் சொன்னேன் "அவர்கள் உயிருடன் இருந்தால்". அவர் சொன்னார் அவர்கள் மரிக்காமல் பரிசுத்தவானாய் இருக்க முடியாது". 160. நான் சொன்னேன் பேதுரு மரிப்பதற்கு முன்போ, அல்லது மரித்த பின்னோ, எப்பொழுது பரிசுத்தவான் ஆனார். பாருங்கள், ஆம், பவுலும் மரிப்பதற்கு முன்போ, அல்லது மரித்த பின்னோ,-? எப்பொழுது பரிசுத்தமானார். அவரும் அதே காரியத்தை தான் செய்தார். பாருங்கள்-! 161. அவர்கள், "உங்கள் அபிப்பிராயம் என்ன..." என்றார்கள், "நீங்கள் ஒரு ... நீங்கள் ஒரு கத்தோலிக்கரல்லாதவர், இல்லையா-?" நான், “இல்லை சார். நான் ஒரு புராட்டஸ்டன்ட்” அவர், “நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்…” என்றார். நான் சொன்னேன், "நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன், ஜனங்களை அல்ல, சபையின் கொள்கைகளை மட்டுமே மறுக்கிறேன், பாருங்கள்." அதற்கு அவர், “சபையை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன-?” என்று கேட்டார். நான், "நீங்கள் என்னிடம் அப்படிக் கேட்டதற்கு வருந்துகிறேன்" என்றேன். அதற்கு அவர், “அதை குறித்து மேலே சொல்லுங்கள். நான் உங்களிடம் கேட்கிறேன். நான் சொன்னேன், "எனக்குத் தெரிந்த ஆவிக் கொள்கையின் மிக உயர்ந்த வடிவம்." அவர், "ஆவிக் கொள்கையா-?" நான் “ஆமாம் ஐயா” என்றேன். 162. அவர், "தாய் சபையை நீங்கள் எப்படி 'ஆவிக்கொள்கை' என்று அழைக்க முடியும்-?" நான், “தாய் என்ன-?” என்றேன். அவர், "தாய் சபை" என்றார். 163. நான், “ஐயா, தாய் ரோமன் கத்தோலிக்க தாய் சபை, ஆம். சபை அமைப்பு. அவள் அதற்கு தாய். வெளிப்படுத்துதல் 17 அவள், ‘வேசிகளின் தாய்’ என்று கூறுகிறது. நான் சொன்னேன், சபையானது ரோமாபுரியில் தொடங்கவில்லை, அது எருசலேமில் தொடங்கியது. பாருங்கள்-! அவர் "தேவன் அவருடைய சபையில் இருக்கிறார்" என்று சொன்னார். நான் "கர்த்தர் வார்த்தையில் இருக்கிறார்" என்று சொன்னேன். 164. எனவே அவர், “உங்களுக்குத் தெரிந்த ஆவிக்கொள்கையின் மிக உயர்ந்த வடிவம் இது என்று சொல்கிறீர்களா-?” என்றார். “அதை எப்படிச் சொன்னாய்-?” என்றார். 165. நான் சொன்னேன், “இறந்தவர்களிடம் பரிந்து பேசும் அனைத்தும் ஆவிக்கொள்கை தான் என்றேன். எல்லா பெண்களும் நடந்து அங்கே தெருவில் சென்று, பாறைகளையும் பொருட்களையும் இழுத்து, ஒரு பெண்ணுடைய காதலர்கள் கொன்ற அந்த இறந்த பெண்ணுக்கு தவம் செய்கின்றனர். மேலும் அவளை ஒரு பரிசுத்தராக ஆக்குவாயா, ஏனெனில் அவள் சபையால் பரிசுத்தர் பட்டம் பெற்றிருக்கிறாளா-? “அது தான் ஆவிக் கொள்கை” என்றேன். "நீ இயேசுவிடம் ஜெபிக்கிறாய், அவர் மரித்தாரே. 166. நான் சொன்னேன், "ஆனால் அவர் மீண்டும் உயிர்தெழுந்தார் ஐயா-!" அது சரி, அது சரி, அது சரி, ஓ எப்படி காரியங்கள் பாருங்கள்-! அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். நான் சொன்னேன், "நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்." அவர் ஒரு தவறும் இல்லை என்று சொன்னார். நான் சொன்னேன் "எல்லாம் சரி" பாருங்கள்-! பாருங்கள்-! 167. என்ன-? ஆமாம்." ஓ-! நாம் கப்பலில் யார் இருக்கிறார் என்பதை மறந்து விட்டோம்." பாருங்கள். எப்படி, அவர் நேற்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று, எப்படி அதை அறிவோம். காரணம் அப்படி இல்லை என்று சொல்லும் அந்த ஜனங்களுக்கு அவருடைய சுவிசேஷம் அவர்களுடைய மடியில தூக்கி எறியப்படுகிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். பிலாத்து அவர் ரத்தத்திற்கு குற்றவுணர்வோடு இருந்தது, போல நீயும் அப்படியே இருக்கிறாய், அது உன் கையில் உள்ளது. நீ அதை கை கழுவி விடலாம், அதை பற்றி எப்போதாவது யோசித்து இருக்கிறாயா-?" 168. ஜனாதிபதியின் ரத்தம் உங்கள் கைகளில் இருக்க விரும்புவீர்கள் என்றால், அது எப்படி இருக்கும்-? நீங்கள் என்ன செய்வீர்கள். "என்ன வந்து கொண்டு இருக்கிறது" என்று உங்களுக்குத் தெரியும்." நல்லது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் கைகளில் இருப்பது ஒரு சொற்ப காரியம், அது சரி தானே. 169. குடியரசுத் தலைவரைக் கொன்றவர் ஒரு வேளை ஓஸ்வால்ட் அதைச் செய்யாமல் இருக்கலாம். அதை யார் செய்தார்கள் என்பதை அவர்கள் ஒரு போதும் அறிய மாட்டார்கள். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்றால், அந்த நபர் உயிருடன் இருந்தால், இன்றிரவு, ஜனாதிபதியின் இரத்தம் அவரது கைகளில் இருப்பதை அறிந்தால் என்ன செய்வது-? அவர்கள் அவரைப் பிடித்து இந்த தேசத்தின் நீதியான உச்ச நீதிமன்றத்தை சந்திக்க நேரிட்டால் அவர் என்ன செய்வார்-? கோபமான கண்கள் அவரைப் பார்க்கின்றன. உங்களுக்குத் தெரியும், அவர் கருணை கேட்கலாம், "நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் - நான் - நான் உங்களுக்கு சொல்கிறேன், நான் - நான் ஒரு நல்ல தோழர். நான் நான் அதை செய்ய விரும்பவில்லை." கருணை இருக்காது. அந்த உச்ச நீதிமன்றத்தை அப்படிப் பார்ப்பது மோசமாக இருந்தது. 170. ஆனால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் பெற்று, அவரை சிலுவையில் அறைந்த குற்றத்தை நீங்கள் பெற்ற போது, தேவனின் கண்களைப் பார்ப்பது பற்றி என்ன-? அது பற்றி என்ன-? 171. ஒரு விமான பைலட் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது கவனித்து இருக்கிறீர்களா-? அவருக்கு கிடைத்துள்ளது... அவரால் முடிந்த ஒவ்வொரு கருவியையும் சரி பார்த்து வருகிறார். அவர் அந்த விமானத்தை வெளியே எடுத்துச் செல்வார், அனைத்தையும் சரி பார்ப்பார்; அங்கேயே நின்று அதை மறுபரிசீலனை செய்து, அது புறப்படுமா என்று பார்க்க, மற்றும் எல்லாவற்றையும். ஏன்-? அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அவர் பார்க்கவில்லை என்றால் அவரது கைகளில் ரத்தம் இருக்கும். 172. ஒரு டாக்டரைப் பாருங்கள், ஒரு அறுவை சிகிச்சைக்காக, அவர் ஒவ்வொரு கருவியையும் எப்படிச் சரி பார்க்கிறார், எக்ஸ்ரே எடுக்கிறார் மற்றும் எல்லாவற்றையும் செய்கிறார். ஏன்-? அந்த மனிதனை அவன் கைகளில் வைத்திருக்கிறான். அவர் இறந்தால், இரத்தம் அவர் மீது உள்ளது. மேலும், இரத்தம் தன்மீது படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் எல்லாவற் றையும் சரி பார்க்கிறார். அது சரி. அவர் கைகளில் ரத்தம் வருவதை விரும்பவில்லை. மனித இரத்தம் மனிதனின் கைகளில் இருக்க விரும்பவில்லை. 173. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்-? இப்போது நீங்கள் அதை தூக்கி எறிய முடியாது, "நான் அதை நம்பவில்லை" என்று சொல்லுங்கள். வேதாகமம் உங்களைக் கண்டனம் செய்கிறது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று கூறுகிறார்; இங்கே அவர் வேலை செய்கிறார், அதையே செய்து கொண்டிருக்கிறார். இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது, எப்படி இருந்தாலும், அதை நீங்கள் கழுவ முடியாது. 174. பிலாத்து அதை முயற்சி செய்தான். அவரது கைகளை கழுவ போதுமான தண்ணீர் இருக்கவில்லை. அதை தன்னுடைய அரசாங்கத்தில் வேறொருவர் மீது தள்ள முயற்சித்தான். உயர் அதிகாரி, அல்லது மூப்பர், "நீங்கள் அதை செய்ய அனுமதித்தால்," ஆனால் அது பின் வாங்கியது. 175. அது சரியாக உன் பக்கம் திரும்பி வரும், பாருங்கள்-! உங்கள் கைகளில் இருந்து அதை எடுத்துப் போட முடியாது. அதை ஏற்றுக் கொள்வதை தவிர ஒரு வழியும் இல்லை. உங்கள் கைகளில் இருந்து எடுத்து போட ஒரு வழி உண்டு. அதை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஒரே வழி தான் உண்டு. இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தன்னை வெளிப்படுத்தியது போல அவர் வாக்களித்ததின் நிமித்தம், எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தினது போல, இன்றும் அவ்வாறு வெளிப்படுத்துவதால், அவரே மேசியா என்பதை நிச்சயித்துக் கொள்கிறோம். இப்போது அவர் உங்களுடைய கையில் இருக்கிறார், உங்கள் உடைய மடியில் உள்ளது. இயேசு என்னும் கிறிஸ்துவை என்ன செய்யப் போகிறீர்கள். 176. "இயேசு சொன்னார், நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன். எப்பொழுதும், முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருப்பேன். அவர் அது போலவே, இருப்பார். திரும்பவும் அவர் சொன்னார்," உங்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை, கொஞ்சம் காலம் இந்த உலகம் என்னை காணாது, ஆனால் நீங்கள் என்னை காண்பீர்கள். நான் உங்களோடு கூட இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருப்பேன். 177. சொல்லுங்கள், “நான் அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்-? ஓ, சகோதரர் பிரான்ஹாம், என்னால் உறுதியாக இருக்க முடிந்தால்-!” 178. பரிசுத்த யோவான் 14-ஆம் அதிகாரம் 12-ஆம் வசனத்தில் "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்யும் காரியங்களை அவனும் செய்வான்" என்று அவர் சொன்னார். 179. அதை உங்களுக்கு நிரூபிப்பதற்காக அவர் இப்போது காட்சிக்கு அழைக்கப்படுவதற்- காகக் காத்திருக்கிறார். அது சரி. எனவே, இயேசுவை நம் வாழ்வில் எழுப்புவோம். அவர் இங்கு உயிருடன் இருந்தார், வெகுகாலத்திற்கு முன்பு, அவர் உங்களை ஒரு முறை குணப்படுத்தினார், அவர் இதையும் அதையும் செய்தார். அப்போது அவர் உயிருடன் இருந்தார். அவர், இன்று இரவு உயிருடன் இருக்கிறார். அவரை சம்பவ இடத்திற்கு அழையுங்கள். 180. "நான் சொன்னது போலவே, ஒரு வேலை ஷேக்ஸ்பியர் என் உள்ளத்தில் இருந்தால் அவர் செய்கின்ற வேலைகளை நான் செய்வேன். கிறிஸ்து உங்களில் இருந்தால் நீங்கள் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்புவீர்கள். ஒவ்வொரு நேரமும் பிசாசு வரும் போது, அவர் தோற்கடித்தது போலவே நீங்களும் செய்வீர்கள். அவர் சொன்னார் "அது எழுதியிருக்கிறது" அவ்வளவு தான். அது அதின் மேல் நிலைத்து நின்றது. அதை அவர் விசுவாசித்தார் என்பதை சாத்தான் அறிந்து. அவன் அவரிடம் இருந்து ஓடிவிட்டான். 181. பின்பு அவர் தன் வார்த்தையை திருஷ்டாத்திரப்படுத்த அவரை கூப்பிடுங்கள். எபி-13:8 இருப்பது போல் எல்லாம் பயத்தையும், சந்தேகத்தையும், காற்று அடித்துக் கொண்டு போவது போல செய்யும். அந்த பழைய காற்று உங்கள் மனதின் மூலமாய் செல்கிறதா-? "ஒரு வேளை அது எனக்கு கிடைக்காது, ஒரு வேளை அது நானாக இருக்காது, ஒரு வேளை அவர் இதை செய்ய மாட்டார்," ஒரு வேளை என்பதே அதில் கிடையாது. அவர் வாக்குத்தத்தம் பண்ணினார், அது அதில் இருக்கின்ற எல்லா "ஒரு வேளை" எடுத்து போடுகிறது. 182. அவர் மட்டும் இங்கு இருப்பார் என்று எனக்கு தெரிந்தால். ஏன்-? இங்கே அவர் தன்னை இன்றிரவு அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றார். இந்த பூமியில் செய்தது போல, அதே விதமாக, அதே வாக்குத்தத்தோடே செய்கிறார். இதனால் தான் சீஷர்கள் அவரை விசுவாசித்தனர். 183. ஒரு பிரபலமான நம்பிக்கை என்னவென்றால், அந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அவன் ஏதோ ஒரு விதமான குறி சொல்பவன், ஒரு அசுத்த ஆவி, மற்றவர்கள் எண்ணங்களை அறிகிற பெயல்செபூல், ஏதோ ஒரு விதமான குறி சொல்லும் பொல்லாத ஆவி. 184. இயேசு அவர்களிடம், “அது பரிசுத்தாவியை நிந்திப்பதாக இருக்கும்” என்று கூறினார் 185. இப்போது, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளையும் செய்வான்” என்று எழுதப்பட்டிருக்கிறது. நான், நான்... நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் எதைக் கேட்டுக் கொள்வீர்களா, அது உங்களுக்கு கொடுக்கப்படும். பாருங்கள்-! இப்பொழுது, "சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனின் வருகையிலும் நடக்கும்" என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர் அளித்து வரும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும்-! எபிரேயர் 13:8, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.” அந்த வாக்குறுதிகள் அனைத்தும், அது எழுதப்பட்டு இருக்கிறது. அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகம் அடைவார்கள். இப்போது அதை செய்யட்டும். ஆமென். 186. இயேசுவை எழுப்புங்கள், அவரைக் காட்சிக்கு அழையுங்கள்-! நீங்கள் அதை செய்ய பயப்படுகிறீர்களா-? கர்த்தருடைய சவாலை ஏற்றுக்கொள்ள நீங்கள் பயப்படுகிறீர்களா-? 187. ஜெபிப்போம், ஒரு சில நிமிடங்கள் தலைகளை தாழ்த்தி வணங்குவோம். எல்லோரும் உங்களால் முடிந்த அளவு பயபக்தியுடன் இருங்கள், அடுத்த சில நிமிடங்களுக்கு யாரும் அசைய வேண்டாம். நிஜமாகவே உட்காருங்கள். இசைக் கருவி மெதுவாக இசைக்கும் என்றால், நீங்கள் விரும்பினால், ... சில பாடல். 188. ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் இதயங்களுக்குள் இறங்கி வாரும், எங்கள் பலவீனத்தை அறியச் செய்வீராக. 189. என்ன வனைந்து கொள்ளும் கர்த்தாவே, இப்போது ஜெபம் செய்யுங்கள். கர்த்தாவே உன் கரத்தில் நான் ஒரு மண்பாண்டம் உம் சித்தம் போல் என்னை வனைந்து கொண்டு, என்னை உருவாக்கும், நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள அனைவரும், எல்லா இடங்களிலும் ஆழ்ந்த ஜெபத்தில் தரித்திருங்கள். நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். களிமண் நானே, உம் சித்தம் போல், என்னை வணைந்து உண்டாக்கும். பூரணமாய் ஒப்புவித்து. உமக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் 190. இப்போது உண்மையாகவே அமைதியான நேரம். ஜெபம் செய்யுங்கள், கர்த்தராகிய இயேசுவே, இப்போது என்னை ஒரு விசுவாசியாக்கும். என்னிடத்தில் உள்ள எல்லா அவிசுவாசத்தையும் எடுத்து போடும். 191. ஜெப வரிசையை கூப்பிடும் முன், உங்களை ஜெபிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அநேக ஜெப அட்டைகளை கொடுத்ததாக எனது மகன் சொன்னான். கீழேயிருக்கின்ற ஒவ்வொரு உள்பாதைகளிலும், எல்லாரும் ஜெப அட்டைகளை கேட்டு வாங்கி உள்ளனர். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நமக்கு பழைய பாணியிலான ஜெப வரிசையை வைத்திருக்கப் போகிறோம், இங்கே வந்து ஜெபம் செய்யுங்கள். மேலே வந்து வியாதிஸ்தர் மீது கைகளை வைக்கிறோம். நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். 192. அவரை கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்கு உண்டா-? இன்று இரவு நம்முடைய படகில் அவர் இருக்கிறார் என்பதை உணர்கிறீர்களா-? அவர் இந்த சிறிய படகில், இந்த சிறிய பேழையில், இந்த சிறிய விசுவாசிகளின் சரீரத்தில் இருக்கிறார். அவர் நம்மோடு, இந்த இரவில் வாழ்கையின் துயரக்கடலில் சோகமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் முழு இதயத்தோடு அவரை நம்புவீர்கள் என்றால் உங்கள் கரங்களை உயர்த்தி, நான் நம்புகிறேன், நான் அதை நம்புகிறேன், இப்போது உம்மை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள். 193. இப்போது நாங்கள் காத்திருக்கிறோம், பிதாவே ஆண்டவர் இயேசுவே வாருங்கள். ஒரு நாள் இரவு சீடர்கள் தொந்தரவாக இருந்த போது, யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்கள், அது யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவரை நாடு முழுவதும் அந்நியர் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு இரவில், அவர்கள் கதவுகளை மூடிக் கொண்டு அவரை உள்ளே அழைத்துச் சென்ற போது, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கும் உயிர்த்து எழுப்பப் படுவதற்கும் முன்பு செய்ததைப் போலவே செய்தார். அது அவர் என்று அவர்களுக்குத் தெரியும். இன்றிரவு மீண்டும் வாருங்கள், ஆண்டவரே, நாங்கள் காத்திருக்கும் போது நீங்கள் அதை எங்களுக்காக செய்வீர்களா-? நீங்கள் செய்வதைப் பார்த்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் ஜனங்களின் இதயங்களில் இருந்த அனைத்து பயத்தையும் நீக்கி விடுவீராக. 194. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாங்கள் யார், யார் மீது கரங்களை வைக்கிறோமோ அவர்கள் சுகம் அடையட்டும். பலவீனமானவர் யாரும் இருக்க வேண்டாம். ஒவ்வொரு நோயாளியும், மரித்துக் கொண்டிருக்கிறவர்கள், பெண்களுக்குரிய பிரச்சனை உள்ளவர்கள், புற்று நோய் உள்ளவர்கள், காச நோய் உள்ளவர்கள், ரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இந்த இரவு, அவர்கள் சுகம் அடைவார்களாக. 195. இந்த வரிசையில் கடந்து செல்லும் போது நாங்கள், கரங்களை அவர்கள் மீது வைக்கும் போது, அது மனுஷன் மூலமாக மட்டும் போகவில்லை, என்பதை கண்டு உணர்வடையட்டும். ஆனால் அது ஆண்டவரும் மனுஷனும் ஒன்றாய் இருந்து செயல்படுகிறது. கர்த்தர் மனிதனுக்குள் வந்திருக்கிறார். மனுஷனே அல்லாமல், வேறு ஒன்றின் மூலமாகவும் கர்த்தர் செய்வதில்லை, அது தான் அவர் செய்கிறார். அவருடைய கிரியைகளை மனுஷன் மூலமாக தான் செய்கிறார். அவர் அவனை தன் துணையாளனாக பாவிக்கிறார். 196. இயேசு நின்று அறுவடையைப் பார்த்து, “அறுவடை மிகுதி, வேலையாட்கள் குறைவு; அறுவடைக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள்." மேலும் அவர் அறுவடையின் ஆண்டவராக இருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "எனக்குத் தெரிந்ததைச் செய்ய என்னிடம் கேளுங்கள்." 197. ஆனால் அவரோ தன்னை சீஷர்களோடு இணைத்து கொண்டார். அவர்கள் தான் அவரிடம் கேட்டனர். அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு, அவர் சொன்னார். நீங்கள் பெறவில்லை, ஏனென்றால் நீங்கள் கேட்கவில்லை, காரணம் நீங்கள் நம்பவில்லை. ஆனால், பிதாவே நாங்கள் விசுவாசித்து, இன்றிரவு, மீண்டும் எங்கள் மேல் இரக்கமாய் இருக்க கேட்டுக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஆமென் 198. இப்போது ஒவ்வொருவரும் உங்கள் ஜெப அட்டைகளோடு வரிசையில் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. ஒருவேளை மாடியிலோ, கீழோ, எங்கே இருந்தாலும், நாம் ஒன்று அல்லது அரை மணி நேரமோ, அல்லது அதற்கு மேலோ, வியாதியஸ்தருக்காக ஜெபிக்க போகிறோம். இப்போது சரியாக 9:00 மணி, சிறிது நேரம் கழித்து, நாம் அதை செய்ய வேண்டும். நாம் அதை செய்ய முடியும். மேலும் அதினுடாக சென்று மேற்கொள்ள முடியும். 199. இப்போது பாருங்கள், இப்போது ஒருவரும் கடந்து செல்ல வேண்டாம். ஒவ்வொருவரும் அமைதியாக உட்காரவும். உங்களுக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனை தேவை. அதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா-? (சபையார் எல்லரும் ஆமென் என்று சொல்கின்றனர்) எல்லாம் சரி, அது இங்கு இப்போது இருக்கிறது. அந்த சுகமளிப்பவராகிய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். 200. இப்போது ஞாபகம் கொள்ளுங்கள், அவர் இந்த ஆடையை அணிந்திருப்பாரானால் என்னவாய் இருக்கும். அவர் அணிந்திருந்தது ஒரு வேளை அவருடைய சீஷர்களோ அல்லது அவருடைய, வேலைக்காரர்களோ கொடுத்திருக்கலாம்.) என்னுடைய சபையிலிருந்து சகோதரர் காலன்ஸ் மற்றும் அவருடைய சகோதரியும் எனக்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் இங்கு நின்ற கொண்டிருப்பது போல அவர் இந்த அங்கி அணிந்து கொண்டு நிற்பாறானால் அது என்னவாயிருக்கும். உங்களுக்கு தெரியுமா, நீங்கள் அவரிடம் கர்த்தாவே எனக்கு சுகம் அளிக்க முடியுமா-? உங்களுக்கு தெரியுமா-? உங்களுடைய அவிசுவாசத்திற்கு எதிராக அவர் ஒன்றும் செய்ய முடியாது. எத்தனை பேருக்கு அது உண்மை என்று தெரியும். (சபையார் ஆமென் என்று சொல்கின்றனர்) இப்பபொழுது நம்புவது போல அவரை நம்ப வேண்டும். 201. மேலும் நினைவில் கொள்ளுங்கள், அவர் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய முடியாது. பார்க்கவும், அவர் அதை இப்போது அவரது கைக்கு எட்டாதவாறு வைத்திருக்கிறார். அவர் அதை உங்கள் வரம்பிற்குள் வைத்திருக்கிறார். அவர் செய்யக் கூடிய அனைத்தையும் செய்து விட்டார். அது சரியா போதகர்களே-? [போதகர்கள், "ஆமென்" என்று கூறுகிறார்கள்.] பாருங்கள், அதைப் பற்றி அவர் எதுவும் செய்ய முடியாது. அதைப் பற்றி அவர் எதுவும் செய்ய முடியாது. அது அவருக்கு எட்டாதது. அது உங்கள் எல்லையில் உள்ளது. “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமடைந்தோம்." பார்க்கவா-? பார், அது அவருக்கு எட்டாதது. அது, ஆனால் அவர் அதை உங்கள் கைக்கு கொண்டு வந்துள்ளார். அது இப்போது உங்கள் கைவசம் உள்ளது. அது உங்களுக்காக அங்கு வைக்கப்பட்டது. அது இருந்த இடத்தையே அவர் சுட்டிக்காட்டுவார். 202. "சரி," நீங்கள் சொல்கிறீர்கள், "நான் என்றால்... அது எனக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அவர் என்றால்... உண்மையாகவே, அவர் இன்னும் ஜீவிக்கிறாரா-?" 203. நிச்சயமாக, அவர் ஜீவிக்கிறார். நீங்கள் எப்பொழுதும் முட்டி மோதிக் கொண்டு இருக்கிறீர்கள் இது என்ன-? நீங்கள் தவறாக இருக்கும் போது உங்களைக் கண்டனம் செய்வது எது-? உங்களை நம்ப வைப்பது எது-? அது அவர் தான். காணக் கூடாத தேவன் அவர் ஆவி வடிவில் இருப்பதால் உங்களால் கண்களைத் திறந்து அவரைப் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் அவர் ஒரு காணக்கூடிய மக்களிடையே வசிக்கிறார், அந்த மக்களில் அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட வார்த்தையின் மூலம் தம்மைக் காணக் கூடியதாக ஆக்குகிறார். அது இப்போது புரிகிறதா-? இங்கே ஜெப வரிசையை கூப்பிடும் முன் கர்த்தர் அதை செய்வார், என்று நம்புகிறேன். 204. ஜீவனுள்ள வாசஸ்தலமே-! நான், நான், உம்மை நேசிக்கிறேன். அது உங்களுக்கு தெரியும். நான் உங்களுடைய சகோதரனாக இருந்திருக்கிறேன். நான் முயற்சி செய்து உள்ளேன். இருந்தாலும், நான் நிறைய தப்பிதங்களை செய்து உள்ளேன். ஆனால் நான் முயற்சி செய்து உள்ளேன். 205. கேளுங்கள், இன்றிரவு உங்களை குறித்து சிந்தித்துப் பாருங்கள். கடைசி நேரம் ஆவதற்கு முன், பாருங்கள்-! எழும்புங்கள்-! துரிதமாக எழும்புங்கள். அவர் நம்மோடு இங்கே இருக்கிறார். இப்போ ஒவ்வொருவரும்... 206. நான் இந்த கட்டிடத்தில் உள்ள எனக்கு தெரிந்தவர்களை என் உள்ளார்ந்த இருதயத்திலிருந்து அழைக்க முயற்சிப்பேன், மேலும் நான் உங்களை கடந்து சென்றாலும் பரவாயில்லை, நான் உங்களை கடந்து செல்கிறேன் என்பதை இது காட்டுகிறது. அந்த வெளிச்சம் உங்கள் மேல் இருந்தால், நான் அதைக் கடந்து செல்வேன். 207. இந்த முன் இருக்கையில் இங்கேயே அமர்ந்திருக்கும் சகோதரர் ஜூலியஸ் ஸ்டாட்ஸ்க்லேவ் (Julius Stadsklev) அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆம், அதில் நான் உறுதியாக உள்ளேன். 208. பின்னர் நான் பார்க்கும் அடுத்த நபரை, எனக்கு தெரியும். இப்போது ஒரு கணம். சில நிமிடங்களுக்கு முன்பு நான் ஒருவரைப் பார்த்தேன், நான் அடையாளம் கண்டு கொண்டேன் என்று நினைத்தேன், அது தான் சகோதரர் ஈவான்ஸ், ஆனால் அவர் இப்போது இருக்கும் இடத்தை நான் இழந்து விட்டேன். சகோதரர் வெல்ச் ஈவான்ஸ், ஆமாம், ஆமாம், என்னை மன்னியுங்கள். ஆம். 209. மற்றும் ஃப்ரிட்ஸிங்கர் (Fritzinger) அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். இங்கேயே அமர்ந்திருக்கும் அந்தக் குடும்பம். ஈவான்ஸ் மற்றும் ஃபிரிட்ஸிங்கர்கள் ஒன்றாக அமர்ந்து இருக்கிறார்கள். 210. இப்போது இங்கே சகோதரர் மற்றும் சகோதரி டவுச் இங்கேயே அமர்ந்துள்ளனர். அவர்களை நான் அறிவேன். 211. அவர்களில் ஒருவரான இந்தச் சிறுமியை இங்கு நான் அறிவேன். சிறிய ஜூன், அது சகோதரர் ஈவான்ஸின் மற்றும் சகோதரி ஈவான்ஸின் மகள். 212. மேலும் ஃபிரெட் சோத்மென், “ஆமென்” என்று கூறுவதை நான் கேட்டேன். இவரைப் போல யாரும் சொல்லவில்லை. அவர் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மீண்டும் பின்னால், எங்கோ இருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், ஃப்ரெட், எங்கே, எங்கே-? ஓ, ஆம், மீண்டும் அங்கே. 213. அந்த சகோதரர் வுட் அங்கே உங்கள் அருகில் அமர்ந்திருக்கிறாரா-? ஆம், சகோதரர் வுட். எல்லாம் சரி. சரி, இங்கே உட்கார்ந்திருக்கும் பதிவு செய்யும் பையன், ஜிம் மகுவேர். அங்கேயே சகோதரர் பிளேயர் அமர்ந்திருக்கிறார். 214. சரி, எனக்குத் தெரிந்தவர்களை நான் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போது, நான் உன்னைப் உங்களை ஒரு வேளை பார்த்திருக்கலாம். உங்களின் சில முகங்களை நான் பார்த்தது போல் இருக்கிறது, ஆனால் அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. இப்போது, பரிசுத்த ஆவியானவர் அதை அறிந்திருக்கிறார். 215. ஆனால் இப்போது மக்களே, நான்...அது-அது-எனக்கு உங்களைத் தெரியும், நான் உங்களை அறிவேன் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா, நீங்கள் தான் - நீங்கள் ஜெபிக்க வேண்டும். உங்களுக்காக எதற்கும் ஜெபம் செய்யாதீர்கள். அவரைத் தொட முயலாதீர்கள். எனக்காக ஜெபம் செய்யுங்கள், பார்.., நான் சேவை செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரிந்த அந்த ஆண்டவர் தாமே அருகில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இரக்கம் காட்டுவதற்காக, எனக்காக ஜெபியுங்கள். இப்போது நீங்கள் ஜெபிக்கவும். மேலும் மேசியா அவர் தன்னை அடையாளப்படுத்தி காட்டுவாரா என்று அவரிடம் கேட்போம். 216. ஆம், நான் நம்புகிறேன்... எனக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் நான் சகோதரி மூரைப் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். அது சகோதரி மூரா-? நான்-அவள் தான் என்று நினைத்தேன். அவள் கொஞ்சம் எடையை குறைத்துள்ளார், அதனால் தான் நான் அவளை முதலில் அடையாளம் காணவில்லை, ஆனால் அவள் அங்கேயே அமர்ந்திருப்பதை நான் அடையாளம் கண்டு கொண்டேன் என்று நினைத்தேன். 217. இப்போது ஜெபம் செய்யுங்கள், எல்லோரும் அப்படியே பயபக்தியுடன் ஜெபியுங்கள். நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள்... அல்லது கீழே பார்க்கவும், நீங்கள் எதை விரும்பினாலும், ஜெபிக்கவும். 218. மேலும் இப்போது கேளுங்கள், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். அவருடைய வஸ்திரங்களை அந்த ஸ்திரீ தொடுவதற்கு பதிலாக வார்த்தையை குறித்து நான் என்ன பிரசிங்கித்தேன் என்பதை சற்று திரும்பி பார்க்கலாம். இப்போது வேதாகமம் சொல்லுகிறது "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும், வல்லமை உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் ஆத்துமாவையும், ஆவியையும் கணுக்களையும், ஊணையும், பிரிக்கத் தக்கதாக உருவைக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." மேலும் அது இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் நன்கு அறிந்தது. அது சரியா-? (சபையார் ஆமென் என்கின்றனர்) இப்போது "நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களில் வாசமாய் இருந்தால். இப்போது வார்த்தை தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. அந்த வார்த்தையே நினைவு களையும் இதயத்தின் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அது சரியா-? இப்போது ஜெபம் பண்ணுங்கள். இதைவிட எப்படி தெளிவாக இருக்க முடியும். 219. இப்போது ஜெபியுங்கள், சற்று நிஜமாகவே, பயபக்தியுடன், ஜெபியுங்கள். உங்களை நினைவுக் கூராமல், உங்களை நான் அறிந்திருப்பதை போல நீங்கள் எனக்கு தெரியாத யாரோ ஒருவருக்காக ஜெபியுங்கள். அதனால் கர்த்தர் யாரோ ஒருவரை தொடுவார், ஒரு வேலை அவர்கள் தொடப்படலாம். 220. இப்போது துரிதமாக அது எழும்புவதை நான் பார்க்கிறேன். என்னுடைய இடது பக்கமாக அது அந்த மனிதருக்கு மேலே. என்னுடைய தீவிர இடது பக்கமாக ஒரு மனிதன் உட்கார்ந்து, ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவரை எனக்கு தெரியாது. அந்த வெளிச்சம் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த மனிதனுக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதால், அதை குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஓர் இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவர் ஒரு நடுத்தர வயது உடையவர். கண்ணாடி போட்டுக் கொண்டு நரைத்த முடி உள்ளவர். நான் பேசிக் கொண்டிருக்கும் அந்த மனிதன் பெயர் பப்பார்ட் (Buford) அது உங்களுடைய பெயர் தானே.-? ஐயா இப்போ நம்புகிறீர்களா-? இயேசு கிறிஸ்துவை நம்பினால், அவர் உங்களை முழுமையாக ஆக்க முடியும். 221. என் வாழ்க்கையில் அந்த மனிதனை பார்த்ததே இல்லை. இப்போது யாராவது அவரை பார்க்க விரும்பினால், நீங்கள் சற்று எழுந்து நிற்பீர்களா-? யார் அந்த மனிதன் என்று பார்க்க எழுந்து நில்லுங்கள். எங்கே... அங்கே... அதோ... நீங்கள் நான் அவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. இப்போது என்ன அது, நிறுத்து-! சகோதரர் பிரான்ஹமே எனக்கு விளக்க முடியுமா-? என்னால் முடியாது. யார் அதை விளக்க முடியும்-? என்னால் முடியாது. 222. இங்கே, பின்னால், ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் அவள் ஜெபிப்பதை பார்த்திருக்கிறேன். மேலும் ஒரு மனிதன் சுற்றிக் கொண்டு, கரங்களை மேலே தூக்கி, ஒரு விதமாக ஆடிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவன் தள்ளாடுகிறான். அது அவளுடைய கணவர். அவன் ஒரு குடிகாரன். அவன் எல்லா நேரமும் குடிக்கிறான். அவள் அவனுடைய விடுதலைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் திருமதி மார்கன் (Morgan). "உங்கள் கரங்களை உயர்த்துங்கள்" அது சரி நான் உங்களுக்கு ஒரு முன்பின் அறியாதவர். அது உண்மை 223. சற்று முன் கூறின அந்த பெண்மணியே எழும்புங்கள்-!. அதோ நீங்கள் அங்கே, எனக்கு பின்னாலே, உங்களை எனக்கு தெரியாது. "அவள் எதை தொட்டாள் என்று சொல்லுங்கள்" வார்த்தை "இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையருக்கிறதாகவும் இருக்கிறது." 224. நீங்கள் எல்லாரும் உட்காரலாம். நீங்கள் உட்கார ஆசை இருந்தால், சந்தோஷமாய் இருங்கள் களிகூறுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். சந்தோஷமாக இருந்து களி கூறுங்கள். காரணம் கர்த்தர் நமக்கு நன்மை செய்திருக்கிறார். 225. இங்கே என் முன்பாக ஒரு பெண்மணி இருக்கிறாள். அவள் மிகவும் சுகவீனமாக இருக்கிறாள். தான் நினைப்பதற்கு மேலாக, அதிக சுகவீனமாய் இருக்கிறாள். அவள் ரத்த கசிவு (hemorrhoids) நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள். அது புற்றுநோயாய் மாறுகிறது. திருமதி மார்கன் (Morgan) திருமதி மார்கன் அல்ல... மன்னிக்கவும் அது திருமதி ஆண்டர்சன் (Anderson) நீங்கள், உங்கள் முழு மனதோடு நம்புவீர்கள் என்றால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். நீங்கள் அதை நம்புகிறீர்களா பெண்மணியே-? 226. அது சரி என்றால், எழுந்த நில்லுங்கள். எனக்கு அந்த பெண்மணி யார் என்று தெரியாது. அந்த, வேறு பெண்மணியை போல இவர்களும் அதே விதமாகத் தான் இருக்கிறார்கள். அது அவர்கள் மேலே இன்னும் தொங்கிக் கொண்டு இருப்பதை காண்கிறேன். அது தான் காரணம். அந்த ஒரு இரவில்..., நீங்கள் விரும்பினால் உட்காரலாம். சகோதரியே, நம்புங்கள்-! நீங்கள் குணமாவீர்கள். 227. இங்கே திரு வுட்டுடன், நான் ஒரு நாள் வேட்டைக்காக கீழ கென்டக்கிக்கு சென்றிருந்தேன். நான் அங்க நின்று கொண்டிருக்கும் போது, அவரது மைத்துனி அங்கே வந்தார்கள், அவள் கிறிஸ்தவள் அல்ல. மேலும் தொண்டையில் புற்றுநோய் இருப்பதாக எண்ணினாள். அன்று காலையில் எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அவள் ஒரு கட்டம் கட்டம் போட்ட உடை அணிந்திருப்பது போல் இருந்தது. அவள் ஒரு சிவப்பு மேல் அங்கியை தரித்திருந்தாள். அவள் அடுத்த அறைக்கு சென்று (எதற்கு அவள் வந்தால் என்று தெரியாது) அந்த சிவப்பு அங்கியை கலைத்து விட்டு அந்த கட்டம் கட்டமாக உள்ள ஆடையுடன் திரும்பி வந்தாள். நான் சொன்னேன். "இங்கே வா". அது தான் அது. பரிசுத்த ஆவி அவளிடம் அது என்னவென்று சொல்லிற்று. அது தான் அது. அவள் வைத்தியரிடம் கூட போகவில்லை. அது முடிந்தது. 228. சில நிமிடங்களுக்கு பிற்பாடு, ஒரு மனிதன் வந்தான். அவன் அங்கு எதற்கு வந்தான் என்ற அவனுக்கு தெரியவில்லை. அவன் இருதய நோயால் மரித்துக் கொண்டிருந்தான். மேலும் "உனக்கு தோழர் கிடைத்தார்களா-?" என்று அவன் சொன்னான். 229. "சகோதரன் பிரான்ஹாம் வெளியே பாங்ஸ் உடன் இருக்கிறார்," என்று அந்தப் பெண்மணி சொன்னார்கள். 230. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று அவர் சொன்னார். நான் உள்ளே சென்றேன். ஒரு நாற்காலி மேலே கிடந்து மாரடைப்பால் அவர் இறந்து கொண்டிருந்தார். கர்த்தர் அவரை சுகமாக்கினார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர், "அன்றைய தினத்தில் இருந்து, ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை" என்று வந்து சொன்னார் 231. மைத்துனி உள்ளே வந்தாள், மருமகள், மாறாக, ஒரு இளம் பெண், திருமதி காக்ஸ் (Mrs.Cox) அந்த கூடாரத்தில் சில நாட்களுக்கு முன், நீரிழிவு நோயால் கஷ்டப்பட்ட ஒரு ஸ்திரீ குணமடைந்து அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த பெண்ணை பார்த்தேன். நான் அவளை கூப்பிடவில்லை காரணம். அவள் அந்த கூடாரத்துக்கு வந்து கொண்டு இருந்தாள். ஓர் இரு நாட்களுக்கு பிறகு அவளை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கூட்டி சென்றனர். அவளுக்கு மிகவும் மோசமான நீரிழிவு நோய் இருந்தது. அவள் அந்த சாலையில் சென்று, மீண்டும் திரும்பி, இரத்தம் பரிசோதிக்கப்பட்டு, திரும்பினாள், அவள் தனது வேலையை விட வேண்டியதாயிருந்தது காரணம், அவள் கரங்கள் மறத்து போயிருந்தது. மேலும் அதைப் போன்ற மற்ற காரியமும் நடந்தது. நான் சொன்னேன் "மார்ஜூரி (Marjurie ) மருத்துவர் உன்னை பரிசோதித்த போதே உன்னுடைய விசுவாசம் உன்னை குணப்படுத்தியது." மேலும் அவளை மருத்துவர் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். அதே மருத்துவமனையில் அவளை மீண்டும் பரிசோதித்தனர். ஆனால் அது எல்லாம் போய்விட்டது, போய்விட்டது, அது போய்க் கொண்டே இருந்தது. ஏனென்றால் அவர் ஆண்டவர் கைவிடமாட்டார். நீங்கள் அதை நம்புங்கள், சபையார் "ஆமென்" என்றனர். 232. இங்கு ஒரு ஆள் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வாழ்க்கையில் சிறிது பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி இருந்தது. அவர் என்னை பார்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஆண் பிள்ளைகள் தான் உண்டு. அவருக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும். உங்களுக்கு தெரியுமா-? அவர் ஒரு பிரசங்கியாரும் கூட. போதகர் திரு பிர்ட் (Reverend Mr.Bird). கைகளை உயர்த்துங்கள். ஐயா-! அது உண்மை, இப்படித் தானே-? கர்த்தர் உங்கள் வேண்டுதலை தருகிறார் ஐயா-! ஆம். 233. பாருங்கள், எவ்வளவு எளிமையாக உள்ளது. தேவன் எளிமையில் வாழுகின்றார். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? (சபையார் ஆமென் என்கின்றனர்) அவருடைய அதிசயங்கள் வெளிப்பட அவர் எளிமையில் செயல்படுபவர். 234. நீங்கள் நுகர்வு திறனை இழந்து விட்டீர்கள். அப்படித் தானே ஸ்திரீயே-? அந்த சகோதரி ஆம் என்கிறார். அங்கு நேர்மையாக உட்கார்ந்து கொண்டு என்னை பார்க்கிறீர்கள். நான் உங்களை கூப்பிடுவேன் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வேண்டுதலை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாருடைய மனைவி அது சரியா-? (ஆமா ஐயா-!) உங்களுடைய முகர்வு திறனை இழந்து விட்டீர்கள். உங்கள் இருதயத்தில் ஒரு பெரிய பாரம் உள்ளது. உங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது சரியா-! உங்கள் பெயர் சகோதரி லேக்ஸ் அது சரியா-? நான் அவர்களை இதற்கு முன் பார்த்ததே இல்லை. 235. நீங்கள் நம்புவீர்கள் என்றால் எல்லாம் கைக்கூடும் அது சரியா-? (சபையார் ஆமென் என்கின்றனர்) நீங்கள் நம்புவீர்கள் என்றால் எல்லாம் கூடும். அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்று நம்புகிறீர்களா-? ஆமென்-!. அவர் தான் எல்லா இருதயத்தின் எண்ணங்களையும், நினைவுகளையும் வகையறுக்கத்தக்கவர் அல்லவா-? அவருக்கு தெரியும். 236. அந்த ஜனங்களை கேளுங்கள்-! சுற்றி பார்த்து யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று சோதித்து பாருங்கள். நான் இந்த ஜனங்களை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது. ஆமாம் ஐயா.-! 237. உன்னில் உள்ள அந்த கட்டியை கர்த்தர் எடுத்து போடுவார் என்று நம்புகிறீர்களா-? இங்கு சுற்றிப் பார்க்கும் போது அவள் குணமடைவதை பார்க்கிறேன். உங்கள் கட்டியை சுகமாக்கி, உங்களை குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா-? இந்த பெண்மணிக்கு அடுத்து உள்ள பெண்ணுக்கு, உடம்பு வீங்கி, மேலும் அது போன்ற காரியங்கள் இருப்பதை காண்கிறேன். கர்த்தர் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா-? நீங்கள் இரண்டு பேரும் நீங்கள் அதை செய்யுங்கள். எல்லாம் சரி. நீங்கள் நம்பினால் அவரால் முடியும். 238. என்னையே பார்த்தபடி, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐயா, தேவன் உங்கள் ஆண்மை சுரப்பி பிரச்சனையைக் குணமாக்க முடியும் என்று நம்புகிறீர்களா-? பின்னால் கருப்பு கழுத்துப் பட்டையை அணிந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐயா, உங்களை கர்த்தர் அந்த ஆண்மை சுரப்பி பிரச்சனையிலிருந்து, சுகம் தர முடியும் என்று நம்புகிறீர்களா-? அது சரி என்றால் கைகளை உயர்த்தவும். அது சரி, எல்லாம் சரி, ஊ ஊ பாருங்கள். 239. அவர் கப்பலில் தான் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா-?. இங்கு சரியாக, அவர் இருக்கிறார். அவருடைய வார்த்தை உரைக்கப்பட்ட விதமாக, சரியாக, அப்படியே செய்கிறது. இருதயத்தின் ரகசியங்களை எடுத்து வெளியே தெரிவிக்கிறது. அது என்னவென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். 240. கர்த்தராகிய இயேசுவே இந்த கை குட்டைகளாக கிடக்கும் சுகவீனர்களுக்காகவும் வியாதியஸ்தர்களுக்காகவும் ஜெபிக்கிறேன். அவர்கள் எழுந்து நின்றுக் கொண்டிருக்கும் போது, கர்த்தாவே, தேவனுடைய படைப்பாற்றலின் சத்தம், மனிதன் மூலமாக பேசிக் கொண்டு இருக்கும் போது, விசுவாசமானது ஒருவரிலிருந்து, மற்றவர்ளுக்கு அதிர்வு உண்டாகும் போது, இந்த கைக்குட்டைகள் ஆசீர்வதிக்கப்படுவதாக. இதை போடும் மக்கள் மீது ஆசீர்வாதம் தங்கி சுகத்தை தருவதாக. 241. இப்பொழுதும் பிதாவே, உம்முடைய ஆவியானவர் இங்கே இருக்கும் போது, உம்மை பின்பற்றின அந்த சீஷர்கள், நீர் படகில் தான் இருக்கிரீர் என்று பார்க்கும் போது, இங்கே பயப்படுவதற்கு தேவையே இல்லை. எந்த தீங்கும் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. நீர் ஏன் இங்கு இருக்கிறீர்-! நீர் தாம் அந்த சிருஷ்டிகர். அது அப்படியே இருக்கட்டும் கர்த்தாவே, இந்த ஜெபவரிசையில் வரும் போது, அவர்களுடைய விசுவாசம் தோல்வி அடைவதே இல்லை. அவர்கள் தாமே குணமடையட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்-! 242. நாம் அவர் இருக்கிறார் என்று எப்படி நிச்சயமாய் சொல்ல முடியும். உனக்கு நிச்சயம் உண்டா-? (சபையார் ஆமென்-! என்று சொல்கின்றனர்) நாம் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் உயிரோடு இருக்கிறார் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். நான் முற்றிலும் உறுதியாய் சொல்ல முடியும். 243. இப்போது, நல்லது, இங்கே பாருங்கள். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல போகிறேன். இங்கு வெறும் சிறிய காரியங்கள் தான் நடக்கிறது. என்னோடு கூட கூட்டங்களுக்கு செல்பவர்களைப் பற்றியும், வீட்டை சுற்றி இருப்பவர்களை பற்றியும் என்ன-? சுற்றி இருக்கிற கூட்டங்களுக்கு என்னோடு கூட செல்லும் சகோதர சகோதரிகளே அங்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிந்த நீங்கள், உங்கள் கைகளை உயர்த்தவும். ஏன்-? இது வெறும் சிறிய காரியம், சிறிய காரியங்கள், பல இடங்களில் நடந்தவற்றை சொல்வேனானால்-? இங்கே. கீழே ஒரு மனிதனை சந்திக்க போகிறோம். நீங்கள் அவனை விட்டு விலகி இருக்குமாறு முயற்சிக்கிறீர்கள். அப்படி செய்யாதீர்கள். காரணம் நான் அங்கு சென்றாக வேண்டும், அவர் மனைவி ஒரு விதமான, ஒரு விதமான காரியம் உண்டு. அவள் குணப்பட போகிறாள். நான் அவருக்கு இதை சொல்ல போகிறேன். இந்தப் பையன் தெருவை கடக்கிறான், ஒரு குறிப்பிட்ட காரியத்தை பற்றி கேட்பான். நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை சொல்லுவேன். அவன் "இதையும்" "அதையும்" செய்வான். அது மீண்டும் மீண்டும் அப்படியே நடக்கிறது. அது ஒரு மனுஷன் அல்ல, அது கிறிஸ்து. நான் ஒரு மனுஷன், ஆனால் அவர் கிறிஸ்து. 244. ஷீவெபோர்ட் (Shreveport) மக்களே நம்புவீர்களா-? உங்கள் முழு இதயத்தோடு நம்புங்கள். சந்தேகிக்காதீர்கள். இங்கே இதனூடாக செல்லும் போது உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்வீர்கள். 245. அந்த பரிசு, என்ன சகோதரன் பிரன்ஹாமே-? எனக்கு விளக்கம் கொடுக்க முடியாது. ஒன்று மட்டும் எனக்கு தெரியும். வில்லியம் பிரான்காம் சற்று அந்த வழியை விட்டு வெளியே வரவேண்டும். அவ்வளவு தான் அவர் அந்த களிமண்ணை, சற்று எடுத்து அதன் மூலமாக வேலை செய்கிறார். 246. இப்போது தரிசனங்கள் சுகத்தைத் தராது. வார்த்தையானது உண்மை என்பதை மட்டும் தரிசனம் அடையாளம் காட்டும். தரிசனங்கள் அவர் இங்கே இருக்கிறார் என்றும், அவர் இன்னும் ஜீவிக்கிற வார்த்தையாக உள்ளார் என்பதை நிரூபிக்கும். உன்னை குணப்படுத்துவதையோ அது செய்வதில்லை, அது செய்வததெல்லாம் அது உன்னிடம் அவர் இங்கே இருக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. அவருடைய இரத்தம் ஏற்கனவே உன்னை குணப்படுத்திவிட்டது. அவர் இங்கே இருக்கும் காரணம், அவர் உன்னை குணப்படுதியதால். அவர் இங்கே இருக்கும் காரணம் என்னவென்றால், அவர் உன்னை இரட்சித்ததால் தான் அவருடைய ஜீவன் உனக்காக கொடுக்கப்பட்டது. அவருடைய இரத்தம் சிந்தபட்டது. அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக உன் மூலமாக, பரிசுத்த ஆவியின் ரூபமாக இங்கே இருக்கிறார். ஆனால் குணப்படுவதோ உன்னுடைய விசுவாசத்தை பொறுத்தது. நீ நம்பினால் அது அப்படியே நடக்கும். ஆமென்-! 247. இப்போது, இந்த பக்கத்தில் உள்ள பக்கப் பாதையில், எத்தனை பேருக்கு ஜெப அட்டைகள் உண்டு. இந்த பக்க பாதையில் இருப்பவர்கள் வெளியே வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வெளியே வந்த பிறகு உடனடியாக அந்த பக்கத்தில் உள்ள பக்கப் பாதையில் உள்ளவர்கள் அந்தப் பக்கமாக வெளியே வரவும். பின்பு இந்த பக்கப் பாதையில் உள்ளவர்கள் நேராக சுற்றி வலது பக்கமாக பின் சென்று வரவும். நாங்கள் சுற்றி ஜெபத்திற்காக வருவோம். 248. சகோதரர் ஜாக் மூர் எங்கு இருக்கிறார்-? (சகோதரர் மூர் சரியாக இங்கே இருக்கிறேன், என்று சொல்கிறார்) அப்படியா, அப்படி என்றால் சரி. ஊழியர்களை எனக்கு உதவி செய்யுமாறு கூப்பிட்டால், அது முற்றிலும் சரியாக இருக்கும். சகோதரரே-! 249. இங்குள்ள எந்த ஊழியரானாலும் சரி, தேவனின் செய்தியை நம்பி, பரிசுத்த வேதாகமம் தான் இதை கற்று தந்தது என்று நம்பி, முற்றிலும் முற்றிலுமாக இயேசு கிறிஸ்து நம்மோடு கூட இங்கு இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, சுகவீனர்களின் மேல், கைகளை வைத்து ஜெபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள்... உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று, விசுவாசத்தில் இருந்து விலகி இருக்க செய்யும் என்றால், இங்கே வரவேண்டாம். பாருங்கள்-! ஏனென்றால் கைகளை வைக்கும் போது அவர்கள் குணமடைவார்கள் என்றும் உங்களுடைய விசுவாசத்தை மாத்திரம் அவர்களோடு சேர்க்கிறீர்கள் என்றும், நீங்கள் இந்த மனிதர்கள் மேல் கைகளை வைக்கும் போது அவர்கள் குணமடைவார்கள் என்று நம்ப வேண்டும். நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை மாத்திரம் அவர்களோடு இணைக்கிறீர்கள். பாருங்கள்-! நான் என்ன அர்த்தம் கொள்கிறேன்-? அவர்கள் மேல் கைகளை வைக்கும் போது உங்களுடைய விசுவாசத்தை அவர்களுடையதோடு இணைக்கிறீர்கள். இதனால் நீங்கள் அவர்களோடு தொடர்பு கொள்கிறீர்கள். மேலும் உங்களுக்கு சிறிய சந்தேகம் அதில் இருப்பின் அதை செய்யாதீர்கள். 250. …..பின்னும் பாருங்கள், ஜெப வரிசையில் உள்ள ஒவ்வொருவரும், நீங்கள் இந்த இரவு குணமடைய போகிறீர்கள், என்பதை குறித்து ஒரு சிறு சந்தேகம் இருந்தாலூம், நீங்கள் வர வேண்டாம். அது உங்களை அதிக மோசமாக்கும். பாருங்கள் உங்கள் நிலைமை அதிக மோசமாகும். பாருங்கள்-! ஜெப வரிசையில் வர வேண்டாம். நாளைய தினம் வரைக்கும் காத்திருங்கள். உங்களுக்கு வேறொரு சமயத்தில், விசுவாசம் எப்போது வருமோ, அப்போது செய்யுங்கள். ஏனென்றால் விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே அது நடைபெறும். 251. இப்போது, ஊழியர்களாகிய சகோதரரை கூப்பிடுகிறேன். நீங்கள் இங்கே வந்து என்னோடு கூட நின்று, வியாதியஸ்தருக்காக இந்த பக்க பாதையில் ஜெபியுங்கள். அந்த நடைமேடையில் இருக்கும் மக்களே சரியாக இங்கே என் முன் இந்த பக்க பாதையில் வாருங்கள். காரணம் அந்த சக்கர நாற்காலிகளையும் மற்ற பொருட்களையும் இந்த பக்க பாதை வழியாக மேலே கொண்டு வர முடியாது. நான் கீழே இறங்கி அவர்களுக்காக ஜெபிக்க போகிறேன். சரியாக இங்கே வாருங்கள். பின்னால் உள்ள ஊழியர்கள், நீங்கள் உங்கள் முழு மனதோடு நம்பினால் வாருங்கள். 252. மேலும், இப்போது அது நீங்கள்-!. நீங்கள் உத்தமமாக இருக்கிறீர்களா-? உங்களுக்கு, ..........உங்களுக்கு, நிஜமாக வேண்டுமா-? நீங்கள் அது நடக்கும் என்று நம்புகிறீர்களா-? பாருங்கள்-! பின்பு அதை நம்புவீர்கள் என்றால், அவர்கள் அதை நம்புவார்கள் என்றால், உங்கள் கரங்களை அவர்கள் மீது வைக்கும் போது, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. அது நீங்கள் இரண்டு பேரும் நம்பும் போது தான் நடக்கும். நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று பாருங்கள். 253. எல்லாம் சரி, சகோதரர்களே-! வரிசையில் நில்லுங்கள். குறுக்கே இரண்டு வரிசையாக ஒவ்வொரு ஊழியரும் நிற்கும் படியாக, இப்பவே குறுக்கே இரண்டு வரிசையாக நில்லுங்கள். கீழே இந்த பக்கப் பாதை வழியாக, கொஞ்சம் வருவீர்கள் என்றாள், நலமாக இருக்கும் . அதனால் அந்த பக்கப்பாதை வழியாக அவர்கள் பின்னே செல்ல முடியும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதை செய்யுங்கள். காரணம், இங்குள்ள சிலர் சரியாக பின்னாலே, இங்கே நெடுக உள்ள பக்க பாதையில் போய் விடுவார்கள். சகோதரரே-! உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த வழியாக சரியாக கீழே வருவீர்கள் என்றால் நலமாக இருக்கும். 254. குற்றம் பிடிப்பவர்களின் முகத்துக்கு எதிராக தாமாகவே முன் வந்து தங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு "நான் நம்புகிறேன்" என்று சொல்லிய இந்தக் கூட்ட ஆண்களுக்காக நான் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆமென்-! இப்படிப்பட்ட ஆண்களுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களோடு தோள் கோர்த்து, என் இருதயத்தை, அவர்களுடைய இருதயத்தோடும், என்னுடைய உணர்ச்சிகளை அவர்களுடைய உணர்ச்சியோடும், என்னுடைய விசுவாசத்தை அவர்களது விசுவாசத்தோடும் கூட இணைப்பதில், மிக்க மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். ஜீவனத்தின் அப்பத்துக்கும், கர்த்தருடைய வார்த்தையோடு, நாங்கள் சகோதரர்களாய், ஒருமித்து, இயேசு கிறிஸ்துவின் ராஜரீக சாம்ராஜியத்தில் உடன் சுதந்திரவாளிகளுமாய் இருக்கிறோம். இந்த மனிதர்கள் எழும்பி நின்று, வார்த்தையை... உண்டாக்க முடியாது. அது அது, அது ஒரு பரிசு பொருள். கடைசி நாட்களில் காட்ட வேண்டிய கடைசி அடையாளம். அது சரியாக என்ன சொல்ல வேண்டுமோ, அதை செய்கிறது. என்னை போன்றோ அல்லது ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ், டாமி ஒஸ்பார்ன் (Oral Roberts, Tommy Hicks, Tommy Osborne) அல்லது வேறு யாராக இருந்தாலும் வியாதியஸ்தர்களின் தலைகளின் மீது கைகளை வைப்பதற்கு அதிகாரம் பெற்று இருப்பது போல, இவர்களுக்கும் அதிகாரம் உண்டு. அதே அதிகாரம், அதே தேவன் இடமிருந்து அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஊழியக்காரராய் இருக்கிறார்கள். 255. இப்பொழுது, நீங்கள்... சகோதரன் பிரைஸ் (Price) அல்லது சகோதரன் மூர் (Moore) அல்லது வேறு, யாராகிலும் வைத்து கொள்ள போகிறேன். நீங்கள் இங்கே வந்து, எங்களோடு ஜெபிப்பதற்கு உதவுங்கள். அல்லது அங்கேயே இருக்க... (இல்லை, நான் ஒலிபெருக்கியை கீழே பெற்றுக் கொள்கிறேன், என்று ஒரு சகோதரன் சொல்கிறான்) எல்லாம் சரி, நீங்கள் ஒலி பெருக்கியை கீழே பெற்றுக் கொள்ளலாம். சரி இப்போது சகோதரர் ப்ரைஸ் என்னோடு வைத்துக் கொள்ள போகிறேன். இப்பொழுது நாங்கள் இதனூடாக வரும் போது........... 256. இப்போது பாருங்கள்-! இது தீர்க்கட்டும். இது அப்படியே இருக்கட்டும். அவனை உளுக்க கூடாது. நீங்கள் அதை செய்ய தேவை இல்லை. வெறும் இதை மாத்திரம் சொல்லுங்கள். "கர்த்தராகிய ஆண்டவரே நான் நம்புகிறேன்", பாருங்கள்-! அவர் இப்பொழுது எழுந்து இருக்கிறார். அவர் அதை செய்து தன்னை நிரூபித்து விட்டார். அவர் அதை செய்து, உங்கள் முன்பாக எழும்பி இருக்கிறார். நான், அவர் இங்கு இருக்கிறார் என்பதை அறிந்து உணருகிறேன். காரணம் அவர் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை, அவரது சாட்சிகளின் மூலமாக பார்க்கிறேன். சற்று யோசியுங்கள்-! சிருஷ்டி கர்த்தர் தாமே தாம் வார்த்தையாக இருந்து இந்த இரவு நிஜமாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மேலும் என்னுடைய வார்த்தையை எடுப்பீர்கள் என்றால், இந்த கட்டிடத்தின் எல்லாம் இடங்களிலும் எது செல்கிறது. அது இங்கு நின்று கொண்டு கூப்பிட்டு, கூப்பிட்டு, கூப்பிட்டு, கூப்பிட்டு, கொண்டே இருக்கலாம் ஆனால் நான் நினைக்கிறேன் 8, அல்லது 10 பேர் அல்லது அதற்கு மேலே கூட வரிசையில் வந்திருக்கிறார்கள் என்பதால் அவருடைய பிரசன்னம் எங்கே இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள அது போதும். 257. இப்போது சகோதரர் பிரைஸ் (Price) விரும்பினால், சபையார் மிகவும் மெதுவாக" அந்த பரிதாபப்பட்டு கொண்டிருக்கிற, இயேசுவாகிய, மேலான மருத்துவர் அருகே இருக்கிறார்" என்ற பாடலை பாடலாம். நாம் சுகமாக வேண்டும் என்பதற்காக அவர் மரித்தார், நிச்சயமாகவே உன்னுடைய சுகவீனத்தை எண்ணி பரிதவித்து கொண்டிருக்கிறார். அவர், அவர் உன்னுடன் பரிதவித்து கொண்டிருக்கிறார். காரணம், நீ சுகவீனமாய் இருக்கிறாய் என்று. மேலும் நீங்கள் வரிசையில் வந்து கொண்டிருக்கும் போது, தேவ மனிதர்கள் உங்கள் மேல் கைகளை வைப்பார்கள். நான் இங்கு நிற்க போகிறேன். இந்த தேவ மனிதர்களோடு எனது இடத்தை எடுக்க போகிறேன். பின்னாலே சரியாக வந்து... 258. இப்போது பாருங்கள்-! இதை மறக்க வேண்டாம். கடினமாக யோசியுங்கள். வரிசையில் கடந்து செல்லும் போது உங்களுடைய விசுவாசத்தை இப்படியாக பதித்துக் கொள்ளவும். அந்த வரிசையின் கடைசியில் நான் வரும் போது எல்லாம் முடிந்திருக்கும். நான் அந்த பக்கப் பாதையில் கீழே போகிறேன். நான் இங்கு சுகவீனமாக நின்று கொண்டிருக்கிறேன், நான் இங்கு கவலையோடு நின்று கொண்டிருக்கிறேன், நான் பயத்தோடு நின்று கொண்டு இருக்கிறேன், நான், காரியம் என்னவோ, என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறேன். மருத்துவர், இதையும், அதையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் கீழே போகும் போது, என் கரங்களை மேலே தூக்கி கொண்டு "நான் சுகமானதற்கு நன்றி கர்த்தாவே" என்று அசைவாடிக் கொண்டு செல்வேன். மேலும், சற்று என்ன நடக்கப் போகிறது என்று கவனியுங்கள். இப்போது நான்...................... 259. அனேக நேரங்களில் நீங்கள் ஜனங்களை பார்க்கும் போது, அவர்கள் மிகவும் உணர்வாக இருக்கின்றனர். முக்கியமாக வியாதியை உடையவர்கள், அப்படி இருக்கின்றனர். அவர்கள் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் கண்கள், ஆத்துமாவின் வாசல் என்று சொல்லப்படுகிறது. இந்த காரணத்தால் தான் இயேசு அவர்களே வெளியே கொண்டு சென்றார். சொல்லப்போனால், அநேகர் இந்த வழியாக சுகம் அடைய முடியாது. (ஏனென்றால் ஒருவரை மாத்திரம் நீங்கள் உடையவர்களாய் இருந்தால்) நேரமாகி விடும். ஆனால் பாருங்கள்-! எத்தனை பேர் ஜெபிக்க காத்திருக்கின்றனர். பாருங்கள்-! நீங்கள் அவர்களை அப்படி எடுக்க முடியாது. ஆனால் இப்போதோ இந்த வழியாகத் தான் உங்கள் விசுவாசத்தை பிடிக்க முடியும். 260. இப்போது, "எனக்கு எனக்கு அது என்னவென்று தெரியாது, எப்படி அதை விளக்குவது என்றும் தெரியவில்லை". இப்படி சொல்லாதீர்கள். ஒருவருக்கும் தெரியாது. 261. ஆனால் நாம் அதை நம்புகிறோம். காரணம் வார்த்தை அந்த விதமாக சொல்லுகிறது. மேலும் அந்த நிருபிக்கப்பட்ட கிறிஸ்து இங்கே நம்மோடு இருக்கிறார். அவர், காட்சியில் கூப்பிடப்பட்டவர். நாம் அவரை கூப்பிட்ட போது அவர் என்ன செய்தார்-? அவர் நமக்கு காண்பித்தது "நான் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர்". "ஆமென்" விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புங்கள். நாம் நமது தலைகளை தாழ்த்தினவாறு... 262. மேலும் சகோதரர் ப்ரைஸ் (Price) அல்லது இங்குள்ள மற்றவர்களில் சிலர்... நாங்கள் இங்கு அந்த "சிறந்த வைத்தியர்" என்னும் பாடலை பாடும் போது சகோதரா பிரைஸ், அந்த வரிசைகளில் உள்ளவர்களை நடத்துவார். ஒவ்வொருவரும் அதனுடாக சென்று உங்கள் இருக்கைகளில் அமரவும். 263. மேலும் நாம் ஜெபிப்போம். இப்போது எல்லாரும் கைகளை கூப்பி ஜெபிக்கவும். நான் ஜெபிக்க போகிறேன். நினைவு கூறுங்கள், பேதுரு தொற்காள் வீட்டிற்கு செல்ல கூப்பிட்ட போது, அவர் ஒரு மூலையில் சென்று, ஜெபித்து, அவர் எழுந்து தொற்காளிடம், சென்று அவள் மேலே கைகளை வைத்து." "தொற்காள் எழுந்திரு" என்றார். 264. பரலோகத்தின் பிதாவே-! நாங்கள் இப்படியாக ஜெபிக்கிறோம். நீங்கள் இங்கே இருக்கிறீர் என்றும், நீர் உம்மை தெரியப்படுத்தினீர் என்றும், நீர் எங்கள் தேவன் என்றும், எங்கள் இரட்சகர் என்றும், ஜெபிக்கிறோம். நீர் எங்களை அநேக முறை சுகப்படுத்தினீர். இந்த மணி நேரத்திலும், இங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அடித்தளத்தில் இருந்து, மேலும், சுற்றி உள்ள எல்லா இடங்களிலிருந்தும் சுகம் அடைவதற்கு வருவார்கள். அவர்கள் இந்த ஜெப வரிசையில் வருவார்கள். இங்கே உம் ஊழியகாரர்களாகிய நாங்கள் எல்லோரும், நீர் வாக்குத் தத்தம் உரைத்தது போலவே, செய்வீர் என்பதை நம்புகிறோம். மேலும் நாங்கள் இந்த வரிசையினூடாக செல்லும், ஆண்கள், பெண்கள் சிறுமியர், சிறுவன்கள், மீது எங்கள் கைகளை வைக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருமே கர்த்தரை நம்பட்டும். 265. மேலும் நாங்கள் இந்த இனிமையான பழைய பாடலை பாடுகிறோம். "சிறந்த வைத்தியர்", அவர் நீர் தான் கர்த்தாவே. இப்போது அந்த அடிப்படையாக இருக்கும் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதற்கு செல்கிறோம். எங்கள் இருதயத்திற்குள் துடித்துக் கொண்டு இருக்கும் எங்கள் விசுவாசம் சொல்கிறதாவது "விசுவாசிப்பவர்களுக்கு, இந்த அடையாளங்கள் பின் தொடரும்". மேலும்" நாங்கள் விசுவாசிகள், நாங்கள் ஒரு வல்லமையுள்ள சேனையாய் இருக்கிறோம். பின்னும் சாத்தானின் சவாலை சந்திக்கப் போகிறோம். நாங்கள் இயேசு கிறிஸ்து நாமத்தால் சந்திக்கிறோம். 266. எல்லாம் சரி, சகோதரர் ப்ரைஸ்,.. மேலும் இப்போது ஒவ்வொருவரும் தங்கள் தலைகளை தாழ்தினவாறு ஜெபித்துக் கொண்டு இருப்போம். சிலர் சிறந்த வைத்தியர்... என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கின்றனர். ஜெப வரிசையில் சென்று கொண்டே இருக்கும் சகோதரர் ப்ரைஸ் பாடலை பாடிக் கொண்டே ஜனங்கள் இதனுடாக வரும் போது நடத்துவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 267. (சகோதரர் ப்ரைசும், சபையார் எல்லாரும், "அந்த சிறந்த வைத்தியர்", என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது, சகோதரன் பிரான்ஹாமும் மற்ற போதகர்களும், சுகவீனர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். டேப்பில் காலி இடம்). 268. இயேசு ஒரு சமயம் சொன்னார்." நான் உங்களுக்கு செய்ததை அறிவீர்களா-?." பாருங்கள்-!. 269. வரிசையில் வரும் போது, உங்கள் மேல் கரங்களை வைக்கும் போது," இயேசு, தான் செய்வேன் என்று சொன்னதை, செய்தார் என்று எத்தனை பேர் இப்போது நம்புவீர்கள்-?" நீங்கள் அதை நம்புவீர்களா-? (சபையார் "ஆமென்" என்கின்றனர்) அவருடைய வார்த்தை தோல்வி ஆகாது. காரணம், நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் அதை நம்புவதை சாட்சி பகர்கிறீர்கள். நான் என் முழு இருதயத்தோடும் அதை நம்பி, சர்வவல்லமையுள்ளவர் உங்களை குணமாக்குவார், என்பதை சொல்லுவேன். பாருங்கள்-! காரணம் எனக்கு அது வேதாகமம் என்று தெரியும். அது உண்மை. இந்த வரிசையில் வருகிற ஒவ்வொருவரும் முற்றிலுமாக குணமடைவார்கள் என்பதை நம்புகிறேன். 270. இப்போது, நீங்கள் அதை என்ன செய்யப் போகிறீர்கள்-?. நீங்கள் சந்தேகிக்க வேண்டாம். உங்கள் முன்பாகவே அதை பிடித்திருங்கள். அது உங்கள் அடையாளம். உங்கள் அடையாளம் என்ன-? உங்கள் இருதயத்தில் உள்ள பரிசுத்த ஆவியானவர் தான் உங்கள் அடையாளம். அந்த வரிசையில் சென்று உள்ளீர்கள், அது கண்டிப்பாக நடக்கும். அது நடக்காது என்பதற்கு ஒரு வழியுமே இல்லை... இதற்கு முன்பாக எத்தனை பேர் அதினூடாக சென்றிருந்தாலும் சரி. அது, இது தான். இதுவே அந்த மணி நேரம். இது வே அந்த நேரம். அது முடிந்தது. அது சீர் அமைக்கப்பட்டு விட்டது. நீங்கள் சுகவீனராக இருந்ததையோ, வியாதியாய் இருந்ததையோ, சுகவீனத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது எதுவாக இருந்தாலும், மறந்தே விடுங்கள். கர்த்தர் உங்கள் வியாதிகளையும், கவலைகளையும், பொறுப்பேற்றுக் கொள்வார். நீங்கள் நம்புங்கள். (சபையார் ஆமென் என்கின்றனர்.) நான் என் முழு மனதோடும் நம்புகிறேன். 271. நாம் ஒவ்வொருவரும் இப்போது இது போல எழுந்து நிற்போம். மேலும், இப்போது நான் வாசித்த அந்த கைப்பிரதியில், அந்த சகோதரன் கூறியது போல "உங்கள் கரங்களை உயர்த்துவது, உலகளாவிய ஒப்புக் கொடுத்தலுக்கு அடையாளம்." நான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன். நாம் பாடலாம். 272. "இயேசுவே-! நான் என் சித்தம், என் சந்தேகம், என் விசுவாசம், என் இருதயம், என் சரீரம், என் நோய்கள், என் வாழ்க்கை, எல்லாவற்றையும், ஒப்புகொடுகிறேன்.' ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் எல்லாவற்றையும் உமக்கே என் கிறிஸ்துவே, என் இரட்சகர் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் அவருடைய பிரசன்னத்தில், அனுதினமும், நான் என்றெக்கும் அவரை நேசித்து நம்புவேன். 273. இப்போது உங்கள் கைகளை உயர்த்தும்போது, உங்கள் முழு இருதயத்தோடும் அதை உணர்ந்து, அறிந்து, உங்களை அர்ப்பணியுங்கள். நான், நான் என்னுடைய விசுவாசத்தை அர்ப்பணிக்கிறேன். என்னுடைய எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறேன். நான் சுகமானேன். ஓப்புவித்தேன், நான், கர்த்தாவே, எல்லாவற்றையும் ஒப்புவித்தேன் எல்லாவற்றையும் உமக்கே, என் ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகா. ஒப்புவித்தேன் நான். 274. அற்புதமானவர் அல்லவா-? அவர். (சபையார் ஆமென் என்கின்றனர்) இப்போது யோசியுங்கள், நாம் எல்லாவற்றையும் அர்ப்பணித்தோம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். இதற்கு மேல் நான் என்னுடைய சுயமான யோசனையில் இருப்பதில்லை. நான் யோசித்த பிரகாரம் நான் இனிமேல் யோசிப்பதில்லை. "கர்த்தாவே நீங்கள் யோசிப்பது போல் நான் யோசிக்க போகிறேன். மேலும் நீங்கள் வாக்களித்தீர். "நான் சுகமானேன் என்று" அதை யோசிக்கிறேன். என்னுடைய யோசனைகளை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சுகவீனத்தை பற்றி இனிமேல் நினைக்க போவதே இல்லை. எனக்கு இருந்த என் வியாதியை பற்றி நினைப்பதில்லை. எதை பற்றியும் நினைப்பதில்லை, ஆனால் நீங்கள் சொன்னதை பற்றி மட்டும் யோசிப்பேன். 275. சரியாக உங்கள் முன்னால் ஒரு மனிதன் நிற்கிறார். நீங்கள் சற்று முன் இருந்தது போலவே அவர் நிற்கிறார். நீங்கள் சுகவீனமாக இங்கு இருந்தீர்கள். ஆனால் குணமாக்கபட்ட மனிதராக அவர் நிற்கிறார். இயேசு கிறிஸ்து சரியாகப் பின்னாலே உள்ள அந்த குணமாக்கபட்டவரை கூப்பிடுகிறார். இப்போது நீங்கள் சற்று உங்கள் விசுவாசத்தில், கண்களை மூடி, சரியாக அந்த குனமாக்கபட்ட சரீரத்தில் நடக்கவும். பாருங்கள்-! பின் சற்று நடந்து கொண்டே இருங்கள். "நான் எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறேன்". கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. "நான்"… *******